காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 21, 2024, 12:44 PM IST
  • மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
  • மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது.
  • திருமணம் நடைபெற வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க கலெக்டர் எடுத்த அதிரடி நடவடிக்கை title=

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்கும் விதமாக திருமண மண்டப உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, குழந்தை திருமணத் தடைச் சட்டம் 2006 இன் படி,பெண்களின் திருமண வயது 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், ஆண்களின் திருமண வயது 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் எனவும், மேலும் குழந்தை திருமணம் நடத்தினாலும் அல்லது ஆதரித்தாலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து திருமண மண்டபங்களின் உரிமையாளர்களுக்கு திருமணம் நடத்த முன்பதிவு செய்ய வருவோர்களுக்கு மணமகன் மற்றும் மணமகள் அவர்களின் ஆதார் அட்டை மூலம் பிறந்த தேதி மற்றும் நிரந்தர முகவரி ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே திருமணம் நடைபெற வழிவகை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் படிக்க | நெல்லை : பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை - 6 தனிப்படைகள் அமைப்பு

மேலும் வரும் 23 ஆம் தேதி மே மாதம் முதல் திருமண மண்டபம், சமுதாயக் கூடம் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் மணமகன் மற்றும் மணமகள் அவர்களின் ஆதார் அட்டை நகல் மற்றும் திருமண பத்திரிகை ஆகிவற்றை உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் பதிவேடுகள் அல்லது கோப்புகளாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் குழந்தை திருமணம் என தெரியவந்தால், குழந்தைகளுக்கான உதவி எண் 1098, மகளிர் உதவி எண்கள் 181 மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் எனவும், மேலும், இப்புகார் மற்றும் புகார்தாரர் பற்றிய இரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய ஊரக வளர்ச்சி முகமை கட்டிடம் முதல் தளம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் அணுகுமாறு என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | 6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News