‘தேர்தல் முடிந்ததும் யானை வாங்கித் தருவேன்!’- அதிமுக வேட்பாளர்!

வரும் மக்களவை தேர்தலில் வெற்றிப்பெறால், தேர்தல் முடிந்தவுடன் திருண்ணாமலை கோவிலுக்கு யானை வாங்கி தருவேன் என அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்குறுதி கொடுத்துள்ளார்!

Last Updated : Mar 26, 2019, 06:28 PM IST
‘தேர்தல் முடிந்ததும் யானை வாங்கித் தருவேன்!’- அதிமுக வேட்பாளர்! title=

வரும் மக்களவை தேர்தலில் வெற்றிப்பெறால், தேர்தல் முடிந்தவுடன் திருண்ணாமலை கோவிலுக்கு யானை வாங்கி தருவேன் என அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வாக்குறுதி கொடுத்துள்ளார்!

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காண்கிறார் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு ஆரதவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து வருகின்றார். 

இந்நிலையிலை தான் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றால், திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு தன் சொந்த செலவில் யானை வாங்கித் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்., ‘திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் யானை இல்லை என்ற குறையை பக்தர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழக முதல்வர் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆகியோருடன் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்’ என தெரிவித்தார். மேலும், தேர்தல் முடிந்த பிறகு ஆலயத்துக்கு எனது சொந்த செலவில் யானை வாங்கித் தருவதாக முடிவு செய்துள்ளேன். 

வளர்ந்து வரும் நகரமாக இருக்கும் திருவண்ணாமலை நகராட்சியை, மாநகராட்சியாக உயர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்' என தெரிவித்தார். 

---மக்களவை தேர்தல் 2019---

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது, முதல் கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது. 

Trending News