தமிழ்நாட்டில், விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத்தோடு இணைந்த பகுதியில் சதுரகிரி மலையில் 18 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். அங்கே ஏராளமான அதிசய சம்பவங்கள் தற்காலத்திலும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இங்கே உள்ள சுந்தரமகாலிங்கம் கோவில், சந்தன மகாலிங்கம் கோவில், தவசி பாறை உள்ளிட்ட பிரசித்தி பெற்ற இடங்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகின்றன. மலை ஏறுவதற்கு 2 மணி நேரங்கள் ஆகும்.
எப்போது வேண்டுமானாலும் இந்த மலைக்கு செல்லலாம் என்ற நிலை இருந்த நிலையில், கடந்த 2015ல் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பலர் சிக்கிக்கொண்டதை அடுத்து, தற்போது அமாவாசை தினம் மற்றும் பெளர்ணமி தினங்களுக்கு முன்னர் வரும் பிரதோஷ நாட்கள் அன்று பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு அந்த 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த நிலையில், கொரோனவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில்கள் திறக்கப்படும் நிலையில், ஆனி மாத அமாவாசையை ஒட்டி இந்த மலைக்கு 4 நாட்கள் செல்ல அரசு அனுமதி அளித்திருந்தது.
காலை 7 மணி முதல் 1 மணி வரை மட்டுமே மலை ஏறலாம் என்று அறிவித்திருந்த மாவட்ட நிர்வாகம், ஓடைகளில் நீராடவும், தங்கவும் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், மழை காரணமாக, பக்தர்கள் பாதுகாப்பு கருதி சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பிரதோஷ காலத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி தற்போது வனத்துறை இதற்கான அனுமதியை மறுத்துள்ளனர்.
ALSO READ: தொழில்துறையில் நாங்கள் அமைத்த அடித்தளத்தை செம்மையாக பயன்படுத்துங்கள்: EPS
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR