கடந்த 21-ம் தேதி இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணி ஒன்றாக இணைந்தன. மேலும் அன்று மாலையே பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் முன்னிலையில் ஒ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து அதிமுக துணை பொதுச்செயலார் தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறி கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை வழங்கினார்கள்.
மேலும் ஆத்திரமடைந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வரை மாற்றுங்கள், ஏன் ஒ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டது எனவும், மேலும் முதல்வர் பழனிசாமியை மாற்றுங்கள், அவருக்கு பதிலாக சபாநாயகர் தனபாலுவை நியமிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தி வின்ட் ஃப்ளவர் ரிசார்ட்டி தங்க வைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் தற்போது எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள வேறு ரிசார்ட்டிக்கு மாறினார்கள்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏ-வான தங்கதமிழ்செல்வன் கூறியது, நாங்கள் 2 நாட்களுக்கு மட்டுமே தி வின்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் முன்பதிவு செய்திருந்தோம். அதனால் தற்போது மற்றொரு ரிசார்ட்டிக்கு நாங்கள் மாறுகிறோம். மேலும் இன்று எங்களை டி.டி.வி.தினகரன் சந்தித்து பேச உள்ளார். அதன் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கப்படும் என கூறினார்.
We are shifting to another resort as we had booked at Wind Flower resort only for 2 days. Will meet #TTVDhinakaran today: TT Selvam, AIADMK pic.twitter.com/19xZzTxPB1
— ANI (@ANI) August 25, 2017