Madurai, Kalaignar New Jallikattu Arangam in Alanganallur News in Tamil: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 62.78 கோடி ரூபாய் செலவில் "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" இன்று முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. மேலும், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ. வேலு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார்.
ஜல்லிகட்டு அரங்கம் திறப்பு
இதனை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்புடன் போட்டி தொடங்கியது. இதனையொட்டி கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தின் வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர்கள் மாடம், பரிசுபொருள் மாடம் மற்றும் இரண்டடுக்கு வேலி அமைக்கும் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. முதல் சுற்று விளையாட்டை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் தங்க மோதிரத்தை பரிசாக அளித்தார்.
சொன்னதைச் செய்யும் நம் முதல்வர்... #CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/i9x1RsI1px
— TN DIPR (@TNDIPRNEWS) January 24, 2024
இந்த போட்டியில் கலந்துகொள்ள 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் மூலம் தேர்வு செய்யப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று போட்டி தொடங்கும் முன், காளைகளுக்கும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே ஜல்லிக்கட்டு களத்திற்குள் அனுமதிக்கப்படுவர். ஆன்லைன் டோக்கன் எண் வரிசையின் அடிப்படையிலயே வாடிவாசலில் காளைகள் அவிழ்த்துவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சென்னை நகருக்குள் ஆம்னி பேருந்துகள் வருமா? வெளியான முக்கிய தகவல்!
பரிசுகள் என்னென்ன?
இப்போட்டியில் சிறந்த காளைக்கும், சிறந்த மாடுபிடி வீரருக்கும் தமிழக அரசு சார்பில் தலா 1 மகேந்திரா தார் ஜீப் காரும், 1 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்படுகிறது. 2ஆவது பரிசு பெறும் காளைக்கும், வீரருக்கும் தலா ஒரு பைக் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பரிசாக வழங்கப்படுகிறது.
மேலும் போட்டியின் போது சிறப்பாக களம்காணும் மாடுபிடிவீரர்களுக்கும், காளையின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி நாணயங்கள் முதல் அண்டா சைக்கிள், பீரோ, பிரிட்ஜ், டிவி, கட்டில், உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் வழங்கபட உள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கினைத்" திறந்து வைத்து விழாப் பேருரையாற்றி, ஜல்லிக்கட்டு போட்டியினை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார்கள்.https://t.co/4bjteyn1q1#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mp_saminathan
— TN DIPR (@TNDIPRNEWS) January 24, 2024
ஏற்பாடுகள் என்னென்ன?
5 ஆயிரம் பேர் வரை போட்டியினை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகளவிற்கு பார்வையாளர்கள் வருகை தரும்போது சுழற்சி முறையில் போட்டியை பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளது. காளைகளுக்கு தீவனங்களும், ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளது.
போட்டியை முன்னிட்டு கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அதிகளவிற்கு வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை சரக DIG ரம்யா பாரதி தலைமையில், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் உட்பட 2200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ