திருவாரூர்: தேர்தலின் போதுதான் தேர்தல் கூட்டணிகள் பற்றி தெரியவரும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான கே பழனிசாமி (K Palanisamy) வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 2021 மாநில சட்டமன்றத் தேர்தலில், கூட்டணிக்கு தலைமை வகிப்பதற்கான அனைத்து உரிமையும் பாஜக-வுக்கு உள்ளது என பாஜக (BJP) தலைவர் ஒருவர் வலியுறுத்திய சில நாட்களுக்குப் பின்னர் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக (ADMK), கூட்டணிக்கு தலைமை வகிக்குமா, அல்லது பாஜக தலைமையில் கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு, கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி எது என்பது தேர்தல்களின் போதுதான் தெரியவரும், என்று முதல்வர் கூறினார்.
மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், அதிமுக அல்லது திமுக (DMK) முகாமில், கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.
"எனவே, தேர்தல்கள் நடைபெறும் போது மட்டுமே, கூட்டணிகள் முடிவு செய்யப்படும்," என்று அவர் கூறினார்.
ALSO READ: COVID மீட்பு விகிதத்தில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம்: மத்திய சுகாதார அமைச்சகம்!!
அண்மையில் திமுகவிலிருந்து பாஜக-வில் இணைந்த பாஜக மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி, ஆகஸ்ட் 12 ம் தேதி அக்கட்சியின் வளர்ச்சி, மாநிலத்தின் அரசியல் சூழலை மாற்றியுள்ளது என்று கூறியிருந்தார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல், பாஜகவுக்கும் திமுகவுக்கும் இடையிலான போராட்டமாக இருக்கும், இது "பாஜக தலைமையிலான கூட்டணியின் கீழ்" இருக்கும் என்று அவர் கூறினார்.
அவரைப் பொறுத்தவரை, ஒரு தேசியக் கட்சியாக இருப்பதால், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை வழிநடத்த பாஜகவுக்கு உரிமை உள்ளது.
துரைசாமியின் கூற்றை சுட்டிக்காட்டிய அதிமுக, இதுபோன்ற கருத்துக்களை, பாஜகவின் மாநில பிரிவுத் தலைவர் எல் முருகன் தெரிவித்தால், அதற்கு வலு இருக்கும் என்று கூறியிருந்தனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஒரு பகுதியாக 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டது. இதில் PMK மற்றும் DMDK ஆகிய கட்சிகளும் இருந்தன.
ALSO READ: செப்டம்பர் 28 முதல் கட்டம் கட்டமாக கோயம்பேடு சந்தை திறக்கப்படும்: OPS