திமுக, பாஜக குறித்து கடுமையாக விமர்சித்த நடிகை விந்தியா

கரகாட்டக்காரன் திரைப்படத்திலாவது கார் பேரீச்சை பழத்திற்காகவாவது தேரும், திமுக கூட்டணி பைசாவிற்கு கூட தேராது என திமுகவின் கூட்டணியை நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 5, 2024, 08:15 AM IST
  • அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான நடிகை விந்தியா கடும் தாக்கு.
  • நடிகை விந்தியா ஓபிஎஸ் மீது கடும் சாடல்.
  • திமுக-வின் கூட்டணியை விமர்சித்த நடிகை விந்தியா.
திமுக, பாஜக குறித்து கடுமையாக விமர்சித்த நடிகை விந்தியா title=

காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து காஞ்சிபுரம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளருமான நடிகை விந்தியா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய நடிகை விந்தியா,

பாஜகவிற்கும், திமுகவிற்கும் ரொம்ப பெரிய வித்தியாசங்கள் எல்லாம் கிடையாது, திமுக திராவிட மாடல் என சொல்லுவார்கள், பாஜக இந்தியா மாடல் என சொல்லுவார்கள், திமுக திருட்டில் ஸ்பெசலிஸ்ட், பாஜக உருட்டில் ஸ்பெசலிஸ்ட் என திமுக பாஜக குறித்து விமர்சித்து பேச ஆரம்பித்த அவர், ஸ்டாலின் மகனை பற்றியே யோசிப்பார், மோடி மதத்தை பற்றியே யோசிப்பார், திமுக கடவுளை திட்டி கிட்டே சாமி கும்பிடுவார்கள், பாஜக கடவுளே திட்டுற அளவிற்கு சாமி கும்பிடுவார்கள், ஸ்டாலின் தினமும் விக்கு வைப்பார், மோடி ஒரு நாள் இந்தியாவையே விற்க வைப்பார் என்றும், திமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளதாகவும் குற்றச்சாட்டினார்.

மேலும் படிக்க | “கருணாநிதி வந்தபின் தான் பழிவாங்கும் அரசியல் ஆரம்பிக்கப்பட்டது” சீமான் குற்றச்சாட்டு!

மேலும் நடிகர் கமலஹாசனை கடுமையாக சாடிய நடிகை விந்தியா. திருமாவளவனை வடிவேல் காமேடி மூலம் கலாய்த்தார். மேலும் பேசிய அவர் திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் இல் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களே இல்லை, தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஸ்டாலினிடம் ஒரு சீட்டில் எழுதி 6 சீட் கேட்டதாகவும் அனால் அதை ஸ்டாலின் அப்பேப்ரையே திருப்பி பார்த்து படித்து விட்டு 9 சீட் கொடுத்ததாகவும் விமர்சித்தார்.

கரகாட்டக்காரன் திரைப்படத்திலாவது கார் பேரீச்சை பழத்திற்காகவாவது தேரும், திமுக கூட்டணி பைசாவிற்கு தேராது என்றும், சரத்குமார் பாஜகவில் கூட்டணி வைப்பதற்கு, எங்களுக்கு சீட் எவ்வுளவு நு சரத்குமார் கேட்க, உங்க கட்சி எவ்வுளவு நு அண்ணாமலை கேட்டார். அதனடிப்படையில் பாஜகவில் தனது கட்சியை சரத்குமார் இணைத்து விட்டார். அதனையடுத்து சரத்குமார் மற்றும் அவரது நடிகை ராதிகா மட்டுமே சென்ற போது உங்க கட்சி எங்க நு கேட்டதற்கு நாங்கள் இருவர் தான் கட்சி என கூறியுள்ளனர் என விமர்சித்த அவர்,
பொம்பள சோக்கை விட மிக மோசமான சோக்கு பாஜகவில் கூட்டணி வைப்பது என கடுமையாக பாஜகவை சாடினார்.

மேலும் படிக்க | ஓட்டுப்போட லீவு... ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News