நாமக்கல்: நீட் தேர்வு அச்சத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு (Tiruchengode) அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு (Neet Exam 2020) அச்சத்தால் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை தந்துள்ளது.
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் தேர்வுக்கு முன்னதாக இன்று (சனிக்கிழமை) தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டனர்.
உயிரிழந்தவர்கள் மதுரைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா (19), தர்மபுரி மாவட்டம் இலக்கியாம்பட்டியைச் சேர்ந்த எம் ஆதித்யா (20), நமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த எம்.மோதிலால் (21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஜோதி ஸ்ரீ துர்கா சனிக்கிழமை அதிகாலையில் மதுரையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையில், இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு தயாராவதற்காக பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டார். நாளை தேர்வு நடைபெறவுள்ள நிலையில், மூன்று பக்க கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை செய்துக்கொண்டார்.
தற்கொலை செய்துக்கொண்ட மாணவி மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல் குடியிருப்பை சேர்ந்த காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம் (Murugasundaram) என்பவரின் மகள் ஆவார்.
ALSO READ |
நீட் தற்கொலை!! "படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை" -இயக்குனர் சேரன் நம்பிக்கை
நீட் தேர்வு தற்கொலை: தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் தற்கொலை செய்துக்கொண்டார்.
அவசர முடிவு வேண்டாம் "எட்டு மாதங்கள் மட்டுமே.. விடியல் பிறக்கும்" -ஸ்டாலின் நம்பிக்கை
துர்காவைப் போலவே, ஆதித்யாவும் இரண்டாவது முறையாக நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். மாலை 6 மணியளவில் அவரது தற்கொலை வெளிச்சத்துக்கு வந்தது, அவரது பெற்றோர்களான மணிவண்ணன் (47) மற்றும் ஜெயச்சித்ரா (40) ஆகியோர் சேலம் மாவட்ட பூசாரிபட்டியில் இருந்து வீடு திரும்பினர். வீட்டின் கதவு உள்ளே இருந்து மூடப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் ஜன்னல் இடைவெளிகளை எட்டிப் பார்த்தபோது, தங்கள் மகன் தூக்கு கயிற்றில் தொங்குவதைப்ப பார்த்து கதறி அழுதனர்.
அதேபோல மோத்திலாலும் தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இப்படி ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்வது சரியான பாதை இல்லை.