சட்டமன்ற தேர்தல் 2016 ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாழ்த்து கூறினார்!!

Updated: May 19, 2016, 06:47 PM IST
சட்டமன்ற தேர்தல் 2016  ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாழ்த்து கூறினார்!!
@AIADMKOfficial

இந்திலையில் சற்று முன் கிடைத்த தகவலின் படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது. இப்படி நடந்தால் ஜெயலலிதா சாதனை படைப்பார்.

அதாவது தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்த பெருமை எம்.ஜி.ஆர் மட்டும் சாரும். அவர் தொடர்ந்து மூன்று முறை  ஆட்சியைத் தக்க வைத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை.

இப்போது நடக்கும் வாக்கு எண்ணிக்கையை பார்த்தல் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் 2வது முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஆவார்.

தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்தர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் "தமிழக சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.