எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் - பெலிக்ஸ் மனைவி!

தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.  

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 13, 2024, 10:33 AM IST
  • சவுக்கு ஷங்கர் சிறையில் அடைப்பு.
  • குண்டாஸ் சட்டமும் போடப்பட்டுள்ளது.
  • யூடியூபர் பெலிக்ஸ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் - பெலிக்ஸ் மனைவி! title=

தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கர்களை தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்த போது சவுக்கு சங்கர் பேசிய பேட்டியை ஒளிபரப்பு செய்த பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்ததை அடுத்து 10ம்தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்று அவரது மனைவி ஜேன்ஆஸ்டின் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அங்கு காவல்துறையினர் இல்லாததால் சுமார் 45 நிமிடம் காத்திருந்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அவர், எனது கணவரை கைது செய்த பின்னர் இதுவரை அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவலும் இல்லை. இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தால் இங்கு புகார் பெற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் இல்லை.  எனது கணவரை கைது செய்த திருச்சியை சேர்ந்த காவல் ஆய்வாளர் அவரை கைது செய்துள்ளோம் விரைவில் திருச்சிக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். 

மேலும் படிக்க | "சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்

அதன் பிறகு எந்தவித தகவலும் இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, எனது கணவர் எங்கு இருக்கிறார் என்பது குறித்து எனக்கு எந்த விபரமும் காவல்துறையினர் வழங்க மறுக்கின்றனர். இது குறித்து நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். இன்று இரவுக்குள் திருச்சி காவல்துறையினர் கண்டிப்பாக எனக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.  கைது செய்வதில் தவறில்லை ஆனால் 48 மணி நேரம் மேல் கடந்தும் இதுவரை நீதிமன்றத்தில் ஏன் ஆஜர்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார். 

சவுக்கு ஷங்கர் 

5 வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆறாவதாக ஒரு வழக்கு பதிவு செய்து அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ உடைய ஆவணங்களை போலியாக தயாரித்து அது தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக சிஎம்டி அதிகாரிகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர் இந்த புகார் தற்போது சைபர் க்ரைம் போலீசாருக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சவுக்கு சங்கர் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் மூன்றாவதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர் போலியாவணங்களை தயாரித்தல் போலி ஆவணங்கள் மூலம் பொது மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இதனிடையே சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை மூன்று வழக்குகளில் கைது செய்யப்பட நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த நிலையில் சவுக்கு சங்கரை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தினர். இதனிடையே கஞ்சா வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் பழனிச்செட்டி போலீசார் சாவுக்கு சங்கரின் சென்னை மதுரவாயில் வீடு திநகர் சவுக்கு மீடியா அலுவலகத்தில் 10 மணி நேரமாக அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அதில் சில ஆவணங்கள் லேப்டாப், ஆட் டிஸ்க்கள்,கஞ்சா அடங்கிய சிகரெட்கள், இரண்டு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.மேலும் இது தொடர்பாகவும் மேலும் ஒரு வழக்கை சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியது.

மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு? ஷாக்கிங் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News