கனரா வங்கி வாடிக்கையாளர் பெயர்களில் பல லட்சம் மோசடி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில் பல லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது உண்மைதான் என மேலாளர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Aug 20, 2022, 04:04 PM IST
  • வங்கி வாடிக்கையாளருக்கு வங்கி அனுப்பிய நோட்டீஸ்
  • லோன் பெற்றுள்ளீர்கள், எப்போது கட்டுவீர்கள் என கேள்வி
கனரா வங்கி வாடிக்கையாளர் பெயர்களில் பல லட்சம் மோசடி! title=

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஒடுவன்குறிச்சி பகுதியை  சேர்ந்தவர் சீதாலட்சுமி. கூலிவேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று சீதாலட்சுமிக்கு  ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கனரா வங்கியில் இருந்து 75 ஆயிரம் லோன்  கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்தது.

இதையடுத்து சீதாலட்சுமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ராசிபுரம் அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட கனரா  வங்கிக்கு சென்று மேலாளரிடம் நோட்டிஸ் குறித்து கேட்டுள்ளனர். முறையாக பதில் அளிக்காததால் வாக்கு வாதம் ஏற்பட்டது. 

பின்னர்  சம்பவத்தையடுத்து வங்கிக்கு வந்த வங்கி பொது மேலாளர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தவறு நடந்திருப்பது உண்மைதான் என கூறி சமாதான முயற்சியில் ஈடுபட்டார். மேலும் உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு 3 பம்பர் பரிசுகள், கணக்கில் வரும் கூடுதல் தொகை

மேலும் இது குறித்து பாதிக்கப்பட்ட சீதாலட்சுமி கூறுகையில், வங்கிக்கு வராத நிலையில் தான் பணம் வாங்கியதாக போலி ஆதார் மூலம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுபோல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். 

இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்தாக தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்ட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வங்கியின் பொது மேலாளர்  வங்கியில் தவறு நடந்தது உண்மைதான் என கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க | EPFO வட்டி விகிதம் உயர உள்ளதா? மத்திய அமைச்சர் கொடுத்த மிகப்பெரிய தகவல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News