மதுரை AIIMS குறித்து வெளியான RTI தகவல்... மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரமாகா மாறியுள்ளது என MK ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!
மத்திய அரசின் AIIMS மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் AIIMS மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொத்தம் 14 இடங்களில் புதிதாக AIIMS மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை தோப்பூரில் AIIMS மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியானது.
மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் என்பவர் மத்திய அரசிடம் RTI மூலம் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள பதில் அறிக்கையிலை மதுரையில் AIIMS அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்காக இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டடுள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் "மத்திய, மாநில அரசுகள் பொய்யர்களின் கூடாரமாகா மாறியுள்ளது என்பதை மதுரை AIIMS குறித்து வெளியான RTI தகவல் உறுதிப்படுத்தியுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
தமிழகத்தில் #AIIMS அமைய மத்திய அரசு 2000 கோடி ஒதுக்கியதாகவும், மதுரையில் அமைக்க ஒப்புதல் தரப்பட்டு கட்டுமானப் பணிகள்தான் தொடங்க வேண்டுமென்றனர் மத்திய, மாநில அரசின் அமைச்சர்கள்!
ஆனால், RTI தகவல் இவையனைத்தும் பொய் என்பதை உறுதிபடுத்தியுள்ளது! பொய்யர்களின் கூடாரம் மத்திய மாநில அரசு! pic.twitter.com/yUVai7BkZ4
— M.K.Stalin (@mkstalin) September 30, 2018