சமூகம் பெரிய இடம் போல - தம்பதிக்கு பெட்ரோல், டீசலை கிஃப்ட் செய்த நண்பர்கள்

புதுமண தம்பதிக்கு நண்பர்கள் பெட்ரோல், டீசலை திருமண பரிசாக அளித்த வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 7, 2022, 02:20 PM IST
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு
  • தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை
  • தம்பதிக்கு பெட்ரோல், டீசல் கிஃப்ட்
சமூகம் பெரிய இடம் போல - தம்பதிக்கு பெட்ரோல், டீசலை கிஃப்ட் செய்த நண்பர்கள் title=

நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிந்ததும் மீண்டும் உயர்த்தப்படுகிறது. 

இதனால் பலரும் பாஜகவை கடுமையாக விமர்சித்துவருகின்றனர். இருப்பினும் ஐந்து மாநில தேர்தல்களுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜகவினர் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி, இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ரஷ்யா - உக்ரைன் போரும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

Petrol, Diesel Gift

பல்வேறு நகரங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை லிட்டர் ரூபாய் 110ஐ தாண்டிவிட்டது. உக்ரைன் ரஷ்யா போரும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த 14 நாட்களில் 12ஆவது தடவை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | அதிமுக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு - பாதியில் வெளியேறிய வைத்தியலிங்கம்

இந்நிலையில் , செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கிரேஷ்குமார் மற்றும் கீர்த்தனா தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தம்பதியின் நண்பர்கள் தம்பதிக்கு அளித்த பரிசு பொருள் வழங்கும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

நண்பர்கள் அந்தத் தம்பதிக்கு ஒரு லிட்டர் பெட்ரோலையும், ஒரு லிட்டர் டீசலையும் பரிசாக அளித்தனர். இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலை கொடுக்கும் அளவுக்கு தம்பதியின் நண்பர்கள் பெரிய இடம் போல என நெட்டிசன்கள் அந்த வீடியோவை பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | இல்லம் தேடிக் கல்வி: திசைமாறுகிறதா? தீர்வுகள் என்னென்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News