சென்னையில் மூன்றில் ஒருவரது உடலில் COVID-19-க்கான antibody-க்கள் உருவாக்கியுள்ளன: ஆய்வு

தொற்று படிப்படியாக குறைந்து வருவதோடு, பண்டிகை காலம் வேகமாக நெருங்கி வருவதால், தமிழக அரசு பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவ புதிய தளர்வுகளை அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 22, 2020, 03:53 PM IST
  • செரோசர்வேயின் ஆய்வுகள் நகரத்தின் மக்கள் தொகையில் 32.3 சதவீதம் பேர் COVID-19-க்கு IgG ஆண்டி-பாடிகளை பெற்றிருப்பதாக கூறியுள்ளன.
  • சமூகத்தில் நோய்த்தொற்றின் பரவலை அளவிட மக்கள்தொகை அடிப்படையிலான செரோசர்வேக்கள் செய்யப்படுகின்றன.
  • புதன்கிழமை, தமிழ்நாட்டில் 3,086 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர்.
சென்னையில் மூன்றில் ஒருவரது உடலில் COVID-19-க்கான antibody-க்கள் உருவாக்கியுள்ளன: ஆய்வு title=

சென்னையின் தினசரி COVID-19 தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து 1,000-க்கு கீழே குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில், இரண்டாவது செரோசர்வேயின் ஆய்வுகள் நகரத்தின் மக்கள் தொகையில் 32.3 சதவீதம் பேர் COVID-19-க்கு IgG ஆண்டி-பாடிகளை பெற்றிருப்பதாக கூறியுள்ளன.

சென்னை கார்ப்பரேஷனின் (Chennai Corporation) கூற்றுப்படி, நகரம் முழுவதும் உள்ள வீதிகள் மற்றும் வீடுகளில் இருந்து 6,389 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 2,062 மாதிரிகளில் IgG ஆன்டிபாடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சமூகத்தில் நோய்த்தொற்றின் பரவலை அளவிட மக்கள்தொகை அடிப்படையிலான செரோசர்வேக்கள் (Serosurvey) செய்யப்படுகின்றன. தனிநபர்கள் நோய்த்தொற்றுக்கு ஆன்டிபாடிகளை உருவாக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறிய இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு இத்தகைய ஆய்வுகள் செய்யப்படுகின்றன.

இரண்டாவது செரோசர்வே அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கப்பட்டது. வார்டு வாரியான புள்ளிவிவரங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளுடனான விரிவான முடிவுகள் இனிதான் வரவுள்ளன. இரண்டு நாட்களில் முடிவுகள் கிடைக்கும் என்றும், கணக்கெடுப்பின் முறை முந்தையதைப் போலவே இருக்கும் என்றும் ஒரு அதிகாரி கூறினார்.

ஜூலை நடுப்பகுதியிலிருந்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அரசாங்க அதிகாரிகள் நடத்திய முந்தைய செரோசர்வே, சென்னையின் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் SARS-CoV-2 நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதைக் குறிப்பிட்டுக் காட்டியது. SARS-CoV-2 என்பது COVID-19 நோயை ஏற்படுத்தும் வைரசாகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வு, நகரின் அனைத்து மண்டலங்களிலிருந்தும் 12,405 நபர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளின் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ALSO READ: தமிழகத்தில் இனி கடைகள் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்: EPS

முதல் கணக்கெடுப்புக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறையில், 10 வயதிற்கு மேற்பட்ட நபர்களிடமிருந்து, நகரத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் இருந்து இரத்த மாதிரிகள் சேகரிப்பட்டன. தரவு சேகரிப்பு ஜூலை 18 முதல் 28 வரை நடந்ததாகக் கூறப்படுகிறது. சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் சோதனை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் நிறைவடைந்தது.

புதன்கிழமை, தமிழ்நாட்டில் (Tamil Nadu) 3,086 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். 39 பேர் இறந்தனர். மொத்த தொற்றின் எண்ணிக்கை 697,116 ஆக உள்ளது. 4,301 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தொற்றிலிருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 650,856 ஆக உள்ளது. மீட்பு விகிதம் 93% ஆகும்.

தொற்று படிப்படியாக குறைந்து வருவதோடு, பண்டிகை காலம் வேகமாக நெருங்கி வருவதால், தமிழக அரசு பொருளாதார நடவடிக்கைகளுக்கு உதவ புதிய தளர்வுகளை அறிவித்தது. வியாழக்கிழமை முதல் அனைத்து கடைகள், ஹோட்டல்கள், தேநீர் கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் கூறினார். இவை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குப் பொருந்தாது. இருப்பினும், அனைத்து இடங்களிலும் COVID-19 நெறிமுறைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ALSO READ: COVID தொற்றால் கண் பார்வை கோளாறு ஏற்பட்ட முதல் நோயாளி பற்றி AIIMS பகீர் தகவல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News