தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடக்கி வைத்தார் EPS!

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 மினி கிளினிக் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார்..!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2020, 10:29 AM IST
    1. தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி.
    2. தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது.
    3. முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.
தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடக்கி வைத்தார் EPS! title=

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 மினி கிளினிக் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்துள்ளார்..!

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றை கட்டுப்படுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 2,000 இடங்களில் மினி கிளினிக் (Mini Clinic) செயல்படும் வகையில் சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த மினி கிளினிக் மூலம் சாதாரண காய்ச்சல், தலைவலி, உள்ளிட்ட உடல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை பெற முடியும். கடந்த செப்டம்பர் மாதம் மினி கிளினிக்குள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) அறிவித்திருந்த நிலையில் இன்று அதற்கான தொடக்க விழா நடைபெறுகிறது. 

ALSO READ | வழக்குகள் மூலம் என்னை அச்சுறுத்தலாம் என முதல்வர் நினைத்தால் அது அறியாமை!

மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர் - ஒரு செவிலியர் - ஒரு உதவியாளர் உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து பகுதி மக்களுக்கும் மருத்துவ சேவை எளிதாக கிடைக்கும் வகையில் இந்த மினி கிளினிக் திட்டத்தை தமிழக அரசு (TN Govt) தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் இடங்களில் திறக்கப்படும் நிலையில், சென்னையில் மட்டும் 200 இடங்களில் மினி கிளினிக்

இந்த திட்டத்திற்கு 'முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம்' (Amma Mini Clinic) என தமிழக அரசு பெயர் சூட்டியுள்ளது. இந்த மினி கிளினிக்கில் பணியாற்றுவதற்காக புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்களை அரசு பணிக்கு எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொறுத்தவரை ராயபுரம், மயிலாப்பூர், வியாசர்பாடி ஆகிய மூன்று இடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படவிருக்கும் நிலையில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இன்று தமிழக முதல்வர் தொடக்கி வைத்துள்ளார். 

ALSO READ | காய்கறி கடைகாரர்களுக்கும் நன்றி சொல்லுங்கள்: சத்குரு வேண்டுகோள்

உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News