சென்னை: தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் (J Anbazhagan) கோவிட் -19 (Coronavirus) காரணமாக இன்று (புதன்கிழமை) காலமானார் என்று தனியார் மருத்துவமனை தெரிவித்துள்ளது. கடுமையான கோவிட் -19 (COVID-19) நிமோனியாவால் உயிருக்கு போராடி வந்த 61 வயதான எம்.எல்.ஏ-வின் உடல்நிலை இன்று அதிகாலை மேலும் மோசமடைந்ததை அடுத்து அவர் காலை 8 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரின் மறைவை குறித்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
Also Read | ஓட்டுநர் உரிமம் அல்லது RC காலாவதியானால் கவலைப்பட வேண்டாம்: முழு விவரத்தை அறிக
எங்கள் COVID-19 வசதியிலுள்ள இயந்திர காற்றோட்டம் உட்பட முழு மருத்துவ உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது: என்று டாக்டர் ரெலா நிறுவனம் மற்றும் மருத்துவ மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (M K Stalin) அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
சிறுநீரக நோய்யால் பாதிக்கப்பட்டு இருந்த ஜெ.அன்பழகனுக்கு கடந்த 2 ஆம் தேதி திடீரென்று காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள டாக்டர் ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 3 ஆம் தேதி அவரது சுவாசக் கோளாறு மோசமடைந்ததால் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது, பின்னர், அவரது உடல்நிலை திங்களன்று மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த DMK MLA ஜெ.அன்பழகன் காலமானார்
அவரது மறைவுக்கு அனைத்து அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவரிசையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) அவர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக (DMK) சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 10, 2020