அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் நாள் இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படுமென முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 13, 2022, 01:13 PM IST
  • அம்பேத்கர் பிறந்தநாள்
  • சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள்
 அம்பேத்கர் பிறந்தநாள் இனி சமத்துவ நாள் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு title=

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்துவருகிறது. இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்  பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ இருட்டறையில் இருக்குதடா உலகம் - சாதி இருக்கிறதென்போனும் இருக்கின்றானே' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய வரிகளைப்போல சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தைத் தன்னுடைய பரந்த அறிவால், ஞானத்தால் விடிய வைத்த விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர். அவர் வேண்டாததை நீக்கிய சிற்பி. வேண்டியதை சேர்த்த ஓவியர்.

அண்ணல் அறிவுச்சுடராய் விளங்கி அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொடுத்தவர். அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவை. எதிர்காலத்துக்கு ஒளிவிளக்கு அது. நேற்று மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. 

Mk Stalin

அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை 'சமூகநீதி நாளாக' அறிவித்தது போல் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை 'சமத்துவ நாள்' என்று கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. 

மேலும் படிக்க | தொடர் விடுமுறையை ஒட்டி தமிழகத்தில் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

இந்தக் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 14ஆம் தேதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

Ambedkar

நேற்றைய கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழுஅளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்தார். இந்த இந்தக் கோரிக்கையையும் ஏற்று அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

மேலும் படிக்க | சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு...முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த 2 பேராசிரியர்கள்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News