கோவையில் MyV3Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..!

கோவையில் பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மைவி3 உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2024, 07:00 AM IST
  • MyV3Ads சக்தி ஆனந்த் மீது கொலை மிரட்டல் வழக்கு
  • பாமக கோவை மாவட்ட செயலாளர் போலீஸில் புகார்
  • சக்தி ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கோவையில் MyV3Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது கொலை மிரட்டல் வழக்கு..! title=

கோவையை தலைமையிடமாக க்கொண்டு MyV3Ads செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் விளம்பரம் பார்த்தால் காசு எனக் கூறி பொதுமக்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி மிகப்பெரிய மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, குறிப்பிட்ட தொகையை முன்பணமாக செலுத்தினால், அதற்கு ஏற்ப மாதந்தோறும் வீட்டில் இருந்தபடியே வருமானம் சம்பாதிக்கலாம் என கூறுகிறது இந்நிறுவனம். இந்த விளம்பரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கவரப்பட்டு, லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். நாளுக்கு நாள் மக்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததால், காவல்துறையில் நேரடியாகவே புகார் அளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | நம்ம யாத்ரி... கமிஷன் இல்லாமல் கோடி வருவாய் - சென்னையில் கலக்கும் ஆட்டோ செயலி

கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி என்பவர் தான் MyV3Ads நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கைகளை தொடங்கினார். அவரின் நடவடிக்கையால் MyV3Ads நிறுவனம் செயல்படுவதில் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், அசோக் ஸ்ரீநிதி சார்பில் பாமக-வினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், கோவையில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் மைவி3 நிறுவனம் விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது. அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களிடம் இது வரை 2000 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்திருக்கிறது. 

கடந்த ஆண்டு மை வி3 மோசடிக்கு எதிராக புகார் கொடுத்தேன் என குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் ஸ்ரீநிதி பீளமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி  ஸ்ரீநிதி - ன் தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மை வி3 நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று கொலை மிரட்டல் எடுத்துள்ளார். அதற்கு பயன்படுத்தப்பட்ட செல்பேசி எண் மைவி3 நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உறுதி ஆகியுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சத்யா ஆனந்த் மற்றும் விஜயராகவன் அறிவுறுத்தலால் தான் இந்த கொலை மிரட்டல் எனக்கு வந்துள்ளது. 

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மைவி3 உரிமையாளர்கள் சத்தியானந்த், விஜயராகவன், மற்றும் ஒருவர் மீது போலீசார் கொலைமிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | TN Board Result 2024 : 10, 11 & 12 ஆம் வகுப்பு ரிசல்ட்! எந்த தளத்தில் எப்படி பார்க்க வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News