மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு....

வீட்டு உபயோகத்திற்காக இல்லம் தோறும் விநியோகிக்கப்படும் மானியத்துடன் கூடிய சமையல்எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது! 

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Nov 1, 2018, 10:18 AM IST
மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு....
Representational Image

வீட்டு உபயோகத்திற்காக இல்லம் தோறும் விநியோகிக்கப்படும் மானியத்துடன் கூடிய சமையல்எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது! 

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்த்தப்படும். சமையல் எரிவாயுவின் விலையை மாதம்தோறும் எண்ணெய் நிறுவனகள் மாற்றியமைத்து வருகின்றனர். இந்நிலையில், மாதத்தின் முதல்நாளையடுத்து இந்த விலை மாற்றத்தை அறிவித்துள்ளது.  

இது குறித்து இந்தியன் ஓயில் நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை நினயித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் 94 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை 502 ரூபாய் 40 காசுகளாக இருந்து இப்போது 505 ரூபாய் 34 காசுகளாக ஆக உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டியின் வரி தாக்கமே விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக சமையல்எரிவாயுவின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதே போன்று மானியம் இல்லாத சிலிண்டரின் விலையும் 60 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது.டெல்லியில் இதன் விலை 880 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதன் விலை 896 ரூபாயாக உள்ளது.