சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு COVID19 பரிசோதனை!

மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!

Last Updated : May 31, 2020, 03:19 PM IST
சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு COVID19 பரிசோதனை!   title=

மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!

மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. இவைகளில் 2 மண்டலங்களுக்கு பொதுப்போக்குவரத்து தடை நீட்டிக்கப்படுகிறது. பொதுப் பேருந்து போக்குவரத்துக்காக 8 மண்டலமாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் மண்டலம் 7,8 க்கு தடை நீட்டிக்கப்படுகிறது. மற்ற 6 மண்டலங்களில் பேருந்து போக்குவரத்து மண்டலங்களுக்கு இடையே மட்டுமே இயக்க அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது போக்குவரத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

1. மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரெயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.

2. மண்டலம் விட்டு மண்டலம் செல்லும்போது, அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யப்படும். 

3. வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம். 

4. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லியில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம். 

5. பரிசோதனையில் தொற்று இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம். 

6. சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்கிற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம்

7. பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி. கொரோனா நெகட்டிவ் என தெரிய வந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

8. அலுவல் ரீதியாக சென்றுவிட்டு இரண்டு நாட்களில் திரும்பி வந்தால் தனிமைப்படுத்துதல் தேவையில்லை.

9. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அலுவல் ரீதியாக சென்று 48 மணி நேரத்தில் திரும்பும் நபருக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை. 

10. பரிசோதனை முடிவில் கொரோனா பாசிடிவ் என தெரிய வந்தால் மருத்துவமனையில் அனுமதி; கொரோனா நெகட்டிவ் என தெரியவந்தால் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். 

பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் வெளியீடு:

* ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். 

* குளிர்சாதன பேருந்துகளில் ஏசி பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும்

* பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவார்கள். 

* பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 

* பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநரின் உடல் வெப்பநிலையை சோதிக்க வேண்டும்

* ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும்; முகக்கவசம், கையுறை  கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்

Trending News