ஊரடங்கு விதிகளை தளர்த்தலாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளை தளர்த்தக்கோரி மாநிலங்களுக்கு மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் அனுப்பியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2022, 06:51 PM IST
  • இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
  • கடந்த 24 மணி நேரத்தில் தினசரி நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,409 என்ற அளவில் உள்ளது.
ஊரடங்கு விதிகளை தளர்த்தலாம் - மத்திய அரசு அறிவுறுத்தல்!  title=

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தினால் மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் ஊரடங்கில் தளர்வுகளை அளிக்கலாம் என கோரி மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.  அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது, மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்கும் வீதமும், நோயாளிகளின் இறப்பு வீதமும் முன்பை விட தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.  கடந்த வாரங்களில் தினசரி நோய்த்தொற்று பாதிப்பு 50,476 என்று இருந்த எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் தினசரி நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,409 என்ற அளவில் உள்ளது.

மேலும் படிக்க | SC: கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆதார் அட்டை கட்டாயமில்லை! மத்திய அரசு தகவல்

ஆரம்ப காலகட்டத்தில் கொரோனா தொடற்று அதிகம் இருந்த நிலையில் பல மாநிலங்கள் அதன் எல்லைகளில் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்தது.  இந்த கட்டுபாடுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் தடைகளை ஏற்படுத்திவிடாமல் இருக்க வேண்டும்.  மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தினசரி நோய் பாதிப்பு எண்ணிக்கை, இறப்பை விகிதம் போன்றவற்றை கவனத்தில் கொண்டு ஊரடங்கு விதிகளை அமல்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாநிலங்களும்/ யூனியன் பிரதேசங்களும் தினசரி நோய் பாதிப்பு எண்ணிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.  அவர்கள் பரிசோதனை செய்தல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் போன்ற முறைகளை பின்பற்ற வேண்டும்.  மேலும் அரசுகள் விதித்துள்ள ஊரடங்கில் அதிகப்படியான தளர்வுகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | இந்தியாவில் கொரோனா ‘Endemic’ நிலையை நெருங்குகிறதா; தொற்று நிபுணர் கூறுவது என்ன!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News