ஒடிசாவை நோக்கி அதிதீவிரமாகும் ஃபோனி... கஜா புயலை விட 2 மடங்கு வேகம்!

ஒடிசாவில் மே 3 ஆம் தேதி ஃபோனி புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!

Last Updated : May 1, 2019, 08:38 AM IST
ஒடிசாவை நோக்கி அதிதீவிரமாகும் ஃபோனி... கஜா புயலை விட 2 மடங்கு வேகம்!  title=

ஒடிசாவில் மே 3 ஆம் தேதி ஃபோனி புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!

இலங்கை அருகே தென் கிழக்கு வங்க கடலில் உருவான ஃபோனி புயல், திசை மாறி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. அதி தீவிர புயலாக மாறியுள்ள ஃபோனி புயல் சென்னையில் இருந்து வங்க கடலில் 690 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மே 3-ஆம் தேதி ஒடிசாவில் கோபால் பூருக்கும், சந்தபாலிக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஃபோனி புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒடிசாவின் 5 மாவட்டங்களில் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒடிசா மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். புயல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, வங்க கடலில் உருவாகியுள்ள ஃபோனி புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் 7வது நாளாக இன்றும் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், குளச்சல் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

 

Trending News