கொம்பன் படத்துக்கு பிறகு முத்தையாவும், கார்த்தியும் இணைந்திருக்கும் படம் விருமன். இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, சரண்யா, வடிவுக்கரசி, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். சூர்யாவும், ஜோதிகாவும் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது.
படத்துக்கு பலரும் கலவையான விமர்சனங்களை கொடுத்தாலும் படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களுக்கு பலத்த வரவேற்பை கொடுத்துள்ளனர். மதுர வீரன் அழகுல பாடலில் அதிதியின் குரலை கொண்டாடும் ரசிகர்கள், கஞ்சா பூ கண்ணாலே பாடலில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை கொண்டாடிவருகின்றனர். அந்தப் பாடலில் இசை மட்டுமின்றி வரிகளும் கவனம் ஈர்த்துள்ளன.
கருமாத்தூர் மணிமாறன் எழுதியிருக்கும் இந்தப் பாடல் வெளியானபோதே பலரது வரவேற்பைப் பெற்றது. மேலும் பலரது ரிங் டோன், காலர் டோன் மெட்டீரியலாகவும் அந்தப் பாடல் மாறியது.
தமிழ்நாட்ல ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது. அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற.. pic.twitter.com/MhgIqchSRf
— DJayakumar (@offiofDJ) August 13, 2022
இந்நிலையில் கஞ்சா பூ கண்ணாலே பாடல் குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்ல ஏற்கனவே திரும்பிய திசையெல்லாம் கஞ்சா தடையில்லாம கிடைக்குது.
மேலும் படிக்க | தீண்டாமைக் கொடுமைக்கு பெயர் போன உத்தரப்பிரதேசத்தை தமிழகத்துடன் ஒப்பிடும் அண்ணாமலை
அதை தடுக்க திமுக அரசுக்கு திராணியும் இல்லை. போதாக்குறைக்கு கஞ்சா பூ கண்ணாலே-னு பாட்டு வேற” என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க | செருப்பை வீசிய சின்றெல்லாவே!... அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ