சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு இவர்கள் மீது நடந்து வருகிறது.

Last Updated : Feb 6, 2017, 11:41 AM IST
சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு title=

புதுடெல்லி: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு இவர்கள் மீது நடந்து வருகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தயாராக உள்ளது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு கோர்ட் வழங்கிய தண்டனையை கர்நாடக ஐகோர்ட் ரத்து செய்து 4 பேரையும் விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீது எந்த நேரத்திலும் தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற நிலையில், இதற்கான தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது. 
இந்த வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்று நீதிபதி பினாக்கி சந்திரகோஷ் தெரிவித்து இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதாவை நீக்கி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தீர்ப்பு வழங்கப்படும். தீர்ப்பு சசிகலாவுக்கு எதிராக வரும்பட்சத்தில் முதல்வர் பதவியேற்கும் சசிகலா பதவியில் இருந்து இறங்க வேண்டியது இருக்கும்.

ஜெயலலிதா மறைந்த நிலையில் சசிகலா நேற்று அதிமுக சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் நேரத்தில் இந்த தீர்ப்பு எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

Trending News