ஒரே மேடையில் 38 மணப்பெண்களுக்கு அலங்காரம் - உலக சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள்

இண்டர்நேசனல் வாரியர்ஸ் புக் ஆப் வேல்ட்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் நடந்த உலக சாதனை நிகழ்ச்சியில் 40 நிமிடங்களில் 38 மணப்பெண்களுக்கு சிகை அலங்காரம் செய்து மேக்கப் கலைஞர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 11, 2022, 05:16 PM IST
  • ஒரே மேடையில் 38 பெண்களுக்கு அலங்காரம்
  • உலக சாதனை படைத்த மேக்கப் கலைஞர்கள்
ஒரே மேடையில் 38 மணப்பெண்களுக்கு அலங்காரம் - உலக சாதனை படைத்தவர்களுக்கு விருதுகள் title=

ஆல் இந்தியா குட் வில் ஹேர் ஆண்ட் பியூட்டி அசோசியேசன் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த உலக சாதனை நிகழ்ச்சியினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கரமராஜா தொடங்கி வைத்தார். இதில் 38 பெண்களுக்கு மேகப் கலைஞர்கள் குறைந்த நேரத்தில் மணப்பெண் சிகை அலங்காரம் செய்யும் நிகழ்வில் பங்கேற்றனர். 

38 கலைஞர்களும் 38 விதமான மணப்பெண் சிகை அலங்காரத்தை செய்து உலக சாதனை படைத்தனர். பொதுவாக மணப்பெண்களுக்கு நீண்ட நேரம் செய்ய கூடிய சிகை அலங்காரத்தை 40 நிமிடங்களில் 38 கலைஞர்கள் 38 பெண்களுக்கு செய்து அசத்தினர். 

இந்த சாதனை இண்டர் நேஷனல் வாரியஸ் புக் ஆப் வேல்ட்ர்டு ரெக்கார்ட்ஸ் உலக சாதனையாக அங்கீகரித்து 38பேருக்கும் விருதுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

மேலும் படிக்க | ATM இயந்திரத்தில் வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகள் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

விருதுகளை விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர ராஜா மற்றும் இண்டர் நேசனல் வாரியஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் தினேஷ் ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர். 

இந்த உலக சாதனை நிகழ்ச்சியை ஆல் இந்தியா குட் வில் ஹேர் ஆண்ட் பியூட்டி அசோசியேசன் நிறுவனர் சித்ரா குமரேசன் ஏற்பாடு செய்திருந்தார். இதில்   துணை தலைவர் உத்திரகுமார் மற்றும் பல்வேறு  சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று இருந்தனர்.இறுதியாக மண அலங்காரத்துடன் 38 பெண்கள் ஒய்யாரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

மேலும் படிக்க | CRIME : தகாத உறவுக்காக போலீசாரே கொலைகாரனான கொடூரம் ! - இப்படி ஒரு கொலையா ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News