தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து தமிழக முதல்வர் மற்றும் துணைமுதல்வர் அறிக்கை.....
மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பானது தீபாவளி திருநாள்; இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாக, தீமை அகன்று நன்மைகள் பெருகும் நாளாக தீபாவளி விளங்குகிறது என தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் அறிக்கை மூலம் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து அறிக்கையில், "மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளி திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்து கொள்கிறோம்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அளித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்தத்திருநாள் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் விளங்குகிறது. இந்த நன்னாளில் மக்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்கள் ஈற்றிவைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளிப்பநிடிகையை கொண்டாடுகிறார்கள்.
தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்பமுடன் வாழ்ந்திட, இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் மனதார வாழ்த்தத், அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நவால்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறோம்" என்று அந்த வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அஇஅதிமுக சார்பில், கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் தீபாவளி வாழ்த்து செய்தி.. pic.twitter.com/Bq4hyKae6Y
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 5, 2018