District Wise TN corona update ஆகஸ்ட் 18: மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு!

 தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 18, 2021, 07:45 PM IST
District Wise TN  corona update ஆகஸ்ட் 18:  மாவட்ட வாரியாக இன்றைய கோவிட் பாதிப்பு! title=

சென்னை: தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,94,233 ஆக அதிகரித்துள்ளது.  தமிழ்நாட்டில் இன்று 1,797 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 20,083 ஆக உள்ளது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 34,610 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 1,804 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தொற்று பாதிப்பு சற்றே குறைந்திருக்கிறது. கடந்த சில தினங்களாகவே நாட்டிலும், தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் மட்டுப்பட்டு வருகிறது.

Also Read | ஆகஸ்ட் 18: தமிழகத்தில் இன்று 1,797 பேருக்கு புதிதாக பாதிப்பு, 31 பேர் பலி

தமிழகத்தில் மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு பட்டியலில் கோவை முதலிடம் பிடித்துள்ளது. கோயம்பத்தூரில் 210 பேருக்கும், அதையடுத்து சென்னையில் 198 பேருக்கும் புதிதாக கொரோனா பாதித்துள்ளது., அதனையடுத்து அதிக பாதிப்பு பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்திருக்கும் ஈரோடு மாவட்டத்தில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 156 ஆக உள்ளது. நான்காம் இடத்தில் தஞ்சாவூரும், ஐந்தாம் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டமும் இடம் பிடித்துள்ளன. 

கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாவட்டங்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பவை:

கோவை - 210
சென்னை - 198
ஈரோடு - 156
தஞ்சாவூர் - 109
செங்கல்பட்டு - 108

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 15
செங்கல்பட்டு 108
சென்னை 198
கோயம்புத்தூர் 210
கடலூர் 55
தர்மபுரி 23
திண்டுக்கல் 13
ஈரோடு 156
கள்ளக்குறிச்சி 29
காஞ்சிபுரம் 42
கன்னியாகுமரி 27
கரூர் 18
கிருஷ்ணகிரி 30
மதுரை 16
மயிலாடுதுறை 23
நாகப்பட்டினம் 36
நாமக்கல் 54
நீலகிரி 34
பெரம்பலூர் 6
புதுக்கோட்டை 32
ராமநாதபுரம் 6
ராணிப்பேட்டை 23
சேலம் 103
சிவகங்கை 20
தென்காசி 7
தஞ்சாவூர் 109
தேனி 14
திருப்பத்தூர் 7
திருவள்ளூர் 67
திருவண்ணாமலை 33
திருவாரூர் 39
தூத்துக்குடி 13
திருநெல்வேலி 15
திருப்பூர் 89
திருச்சி 59
வேலூர் 28
விழுப்புரம் 35
விருதுநகர் 5

 Also Read | Covid Compensation தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News