கோவை பந்தய சாலையில் உள்ள செயற்கை நீரூற்றில் இருந்து வாலாங்குளம் வழியாக சுற்றி வந்து மீண்டும் பந்தய சாலை பகுதியை சுற்றி வந்து 8 கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சியினை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மேற்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர். எட்டு கிலோமீட்டர் நடந்த அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார், தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருகிறார். 38 வருவாய் மாவட்டத்தில் எட்டு கிலோமீட்டர் நடை பாதையை அமைத்து மரம்,இருக்கை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளோம். ஜப்பான் டோக்கியோ சென்ற போது 8 கிலோமீட்டர் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விஷமிகளின் வேலை..! கொதிக்கும் விஷன்.V! நடந்தது என்ன?
மனிதர்கள் தினம் தோறும் பத்தாயிரம் நடைபாதைகள் நடந்தால் உடல் சீராக இருக்கும். மக்களை நடப்பதற்கு பயிற்க நடைபாதை அமைக்கப்படுகிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் 8 கிலோமீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. கடந்த வாரம் மதுரையில் எட்டு கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது. மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள் மாநகராட்சி ஆணையாளர் பாதையை தேர்வு செய்து பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. முதல்வர் 38 மாவட்டங்களில் பணிகள் துவங்கி வைக்கிறார். செந்தில் பாலாஜிக்கு நேற்று முன்தினம் ரெகுலர் ரூம் என்ற அடிப்படையில் ரூமுக்கு வந்துள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
கோவையில் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. தமிழகத்திலேயே சிறந்த நடைபாதை இடம் கோவை பந்த சாலையில் சிறப்பாக உள்ளது. வாலாங்குளம் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நடைபாதை அமைப்பது போன்ற பணி மாநகராட்சி செய்து வருகிறது. கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அங்கு செல்ல உள்ளோம் இன்று. நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மூன்று திட்டங்கள் செயல்படுத்த உள்ளோம் என்றார்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் சில இடங்களில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது எனக் கூறப்பட்டிருந்த நிலையில், சில இடங்களில் ஒத்துழைப்பு அழைக்காததால் சீல் வைக்கப்பட்ட இடங்களும் இருந்து வந்தன. அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்தனர். கடந்த வெள்ளிக்கிழமை கரூர்-ஈரோடு சாலையில் உள்ள அன்னை அப்பார்ட்மெண்டில் சக்தி மெஸ் கார்த்திக் இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடந்த மாதம் வருமானவரித்துறையினர் சோதனையின் போது சீல் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அடுக்குமாரி குடியிருப்பில் வீட்டிற்கு வந்து வருமானவரித்துறை 6 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக 20 மத்திய பாதுகாப்பு படை போலீசார் தற்போது அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் ரயிலை கவிழ்க்க சதி - காவல்துறை தீவிர விசாரணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ