பட்டுக்கோட்டை அருகே ஏரி ஒன்றில் அனுமதியின்றி சவுடு மண் அள்ளப்படுவதாக புகார் வந்த நிலையில் போலீஸ் டி.எஸ்.பி. பாலாஜி, மண் எடுத்தவர்களை கைது செய்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தார். இதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ அண்ணாத்துரை, மண் எடுத்தவர்களுக்கு ஆதரவாக டி.எஸ்.பியிடம் பேசியதுடன் வழக்கு பதிவு செய்யாமல் விட்டு விடுமாறு சொன்ன விவகாரம் சர்ச்சையாகியிருக்கிறது. பட்டுக்கோட்டை, திட்டக்குடி அருகே உள்ள ஏரியில் அனுமதியின்றி விதியை மீறி சிலர் தொடர்ச்சியாக சவுடு மண் எடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை பொறுப்பு டி.எஸ்.பி., பாலாஜிக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அவர் போலீஸ் டீமுடன் திட்டக்குடி ஏரிக்கு சென்றதுடன் மண் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மண் எடுக்க பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரங்கள் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க | நடிகர் விஜய்யை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!
மண் கடத்தியவர்களுக்கு ஆதரவாக பட்டுக்கோட்டை திமுக எம்.எல்.ஏ அண்ணாதுரை, டி.எஸ்.பிக்கு போன் செய்ததுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும், கைது செய்திருப்பவர்களையும் விட சொல்லியிருக்கிறார். அதற்கு டி.எஸ்.பி பாலாஜி, 20 அடி வரை மண் வெட்டி எடுத்துள்ளனர். விஷயம் மேலிடம் வரை சென்று விட்டது. வழக்கு பதுயவில்லை என்றால் நாங்கள் மாட்டிக்கொள்வோம் என்றிருக்கிறார். தாசில்தார் கீழ் தானே இது வரும். தாசில்தாரிடம் கூறிவிட்டோம். வண்டியை விடுங்கள் என எம் எல்ஏ கூறியிருக்கிறார். அதற்கு டி.எஸ்.பி, என்னால் விட முடியாது. வழக்கு பதிவு செய்கிறோம். நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். இதுதொடர்பாக எம்எல்ஏ, டி.எஸ்.பி இருவரும் பேசிய ஆடியோ வெளியே கசிந்து சர்ச்சையாகியுள்ளது.
இது குறித்து டி.எஸ்.பி பாலாஜியிடம் பேசும்போது, காலாவதியான உரிமத்தை வைத்து கிட்டதட்ட 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மண் எடுத்துள்ளனர். இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து ஸ்பாட்டுக்கு சென்றோம். நாங்கள் சென்ற பிறகே சம்மந்தப்பட்ட தாசில்தார் ஏரிக்கு வந்தார். விதியை மீறி சட்டத்துக்கு புறம்பாக மண் எடுப்பதை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளனர். 20 அடி ஆழம் வரை மண் எடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து மண் எடுப்பதற்கு பயன்படுத்திய ஐந்து ஜே.சி.பி இயந்திரங்கள், ஒரு டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். மேலும், மண் கடத்தலில் ஈடுப்பட்ட மாதரசன், கலையரசன், ஸ்ரீதர், குமார் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்திருக்கிறோம். இது தொடர்பாக பேசிய எம்.எல்.ஏ அண்ணாத்துரை, வண்டியையும் அவர்களையும் விட சொன்னார். இல்ல சார் விவகாரம் பெரிதாகிவிட்டது வழக்கு பதிவு செய்வதாக அவரிடம் சொல்லிவிட்டேன்.
அத்துடன் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அண்ணாத்துரை எம்.எல்.ஏவிடம் பேசும்போது, மண்டல தாசிதார் அனுமதி கொடுத்த நிலையில் தாசில்தார் தான் மண் எடுக்க அனுமதி தர வேண்டும் என சொன்னதுமே மண் எடுப்பதை நிறுத்தி விட்டனர். சம்மதப்பட்டவர்கள் வழக்கு பதிவு செய்ய இருப்பதாக அறிந்த நிலையில் என்னிடம் கேட்டு கொண்டுதன் பேரில் நான் டி.எஸ்.பியிடம் பேசினேன். அதில் டி.எஸ்பியிடம் முரண்பாடாகவோ, விதி மீறலாகவோ நான் பேசவில்லை. கொஞ்சம் வேகமாக பேசிய அவர் வழக்கு பதிவு செய்து கொள்கிறேன் என கூறிவிட்டார்.
நான் வேண்டுகோளாக தான் இதை கேட்டேனே தவிர வண்டியை விட சொல்லியும் வழக்கு பதிய வேண்டாம் எனவும் அவருக்கு மிரட்டலோ, அழுத்தமோ கொடுக்கவில்லை. நானும் அவரும் போனில் பேசியது எப்படி வெளியே கசிந்தது என்று தான் தெரியவில்லை. நான் யார் பேசுவதையும் ரெக்கார்டு செய்வது கிடையாது. அந்த டெக்னாலஜி குறித்தும் எனக்கு தெரியாது. அப்படி என்றால் டி.எஸ்.பி போனில் தான் ரெக்கார்டு ஆகியிருக்க வேண்டும். வேண்டும் என்றே அந்த ஆடியோவை வெளியே கசிய விட்டுள்ளனர் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | "அவன் மாட்டிக்கிட்டான்" அமைச்சர் செந்தில் பாலாஜியை திட்டி தீர்த்த டாஸ்மாக் ஊழியர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ