Flie in Soup: திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல அடையார் ஆனந்தபவன் சைவ உணவகத்தில் நேற்று மதியம் பிசியோதெரபி மருத்துவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார், அப்போது உணவு சாப்பிடுவதற்கு முன்பு சர்வர் ஸ்வீட்கான் வெஜ்சூப் கொடுத்துள்ளார், அதனை மருத்துவர் ஸ்பூன் மூலம் கிளறிய பொழுது சூப்பில் இருந்து "ஈ" ஒன்று வெளியே மிதந்து வந்துள்ளது, அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்ட பொழுது அலட்சியமாக ஈ -யை எடுத்து கீழே போட்டுவிட்டு குடியுங்கள் என்று பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த மருத்துவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அதனை செல்போன் மூலம் வீடியோ எடுத்து விட்டு அதற்குண்டான பில் தொகையையும் வழங்கியுள்ளார். பின்னர் நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இரண்டு மாணவர்கள் நியூ 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் ஆகிய அசைவ உணவகத்தில் சிக்கன் தந்தூரி சாப்பிட்டு உயிரிழந்த நிலையில், மீண்டும் கடந்த வாரம் ஆரணி பாலாஜி பவன் சைவ உணவகத்தில் பார்சல் சாப்பாடு வாங்கி எடுத்துச் சென்று பிரித்து பார்க்கும் பொழுது பீட்ரூட் பொரியலில் எலித்தலை இருந்து மிகபெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் பிரபல அடையார் ஆனந்தபவன் உயர்தர சைவ உணவகத்தில் சூப் இல் "ஈ" இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பிரபல சைவ உணவகமாக திகழ்ந்து வருகிறது அடையார் ஆனந்தபவன் உணவகம். அந்த வகையில் திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அடையார் ஆனந்தபவன் உயர்தர சைவ உணவகத்தில் சூப்பில் "ஈ" இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: என்னை திருமணம் செய்தால் அரசு வேலை... 8 திருமணம் செய்து மோசடி செய்த பலே பெண்!
அதுமட்டுமில்லாமல் திருவண்ணாமலையில் செயல்பட்டு வரும் அடையார் ஆனந்தபவன் சைவ உணவகத்தில் காலை மாலை இரவு என மூன்று வேளைகளிலும் தினம்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் உணவகத்தில் அமர்ந்தும் பார்சல் மூலம் வாங்கி சென்றும் சாப்பிட்டு வருகின்றனர். அதேபோன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர் செய்து பார்சல் வாங்கி சென்றும் சாப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் உள்ள பச்சையம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் ராஜேஷ் என்பவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபி பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார் இவர் தனது இரண்டு நண்பருடன் சேர்ந்து நேற்று மதிய உணவு சாப்பிட வந்த போது சூப்பில் "ஈ" இருந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவர் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட சூப்பில் ஈ இருந்ததை காண்பித்து சர்வரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்பும் உரிய பதில் அளிக்காத உணவகத்தின் மேலாளர் மற்றும் ஊழியர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கீழடி அகழாய்வு: 2600 ஆண்டுகளுக்கு முந்தைய அந்தஸ்தின் அடையாளம் கண்டுபிடிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ