மயிலாடுதுறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தினகரன், “இலங்கையில் இனவெறியுடன் ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும். துரோகிகள் கூட்டத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் அதிக செலவு செய்தால் அவரைக்கூட அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்குவார்கள். விரைவில் அதிமுகவை மீட்போம்.
தேர்தலின்போது வெளியிட்ட எந்த அறிவிப்புகளையும் நிறைவேற்றாத திமுக ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும். மீண்டும் தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வருவோம்.
அடிப்படை உறுப்பினர்களால் மட்டும்தான் அதிமுகவின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். இதை யாரும் மாற்ற முடியாது என்பதை எம்ஜிஆர், கட்சியின் சட்ட திட்டத்திலும், உயிலிலும் கூட எழுதி உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | சொற்கள் இல்லாவிட்டால் என்ன அதான் பெயர் இருக்கிறதே - மத்திய அரசை விளாசும் எம்.பி.
சிலரை வசியப்படுத்தி என்னையும், சசிகலாவையும் கட்சியை விட்டு நீக்கியதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள். பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் தண்ணீர் பாட்டிலால் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது, எனக்கே பாவமாகத்தான் இருந்தது. பாவம் ஓபிஎஸ் இன்று அனுபவிக்கிறார். நாளை இதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும்” என்றார்.
OPSஐ "ரப்பர் ஸ்டாம்பாக" வைத்து கோடிகளில் பேரம் காரசார விவாதம் #AIADMK | #OPS | #RubberStamp | #Debate | #ZeeTamilNews https://t.co/tLqtQbL8dw
— Zee Tamil News (@ZeeTamilNews) July 14, 2022
முன்னதாக ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றைய தினம் இபிஎஸ் தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் நடந்த மோதலில் பலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்துக்கும் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ