Edappadi Palanisamy: சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளரி வெள்ளி ஊராட்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சீர்வரிசை மற்றும் பூரண கும்பம் மரியாதையுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக கட்சித் தொண்டர்களை சந்திப்பதற்காக தன் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், எடப்பாடி நகர பயனியர் மாளிகை, வெள்ளரிவெள்ளி ஊராட்சிக்கு வருகை தந்தார்.
அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். அதனைத் தொடர்ந்து பெண்கள், மேளதாளம் முழங்க சீர்வரிசை தட்டுடன் வந்து மரியாதை நிமிர்த்தமாக வரவேற்றனர்.
மேலும் படிக்க | மதுரையில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு!
திமுக ஆட்சி வந்தாலே...
அப்போது கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கரட்டூர் மணி, எடப்பாடி நகர கழகச் செயலாளர் முருகன், எடப்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர் குப்பம்மாள் மாதேஷ் ஆகியோர் தலைமையில் ஆள் உயர மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது,"தமிழ்நாடு அரசு இன்றைய சூழ்நிலையில் மக்களை குடிகாரர்களாக பார்க்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பெரிய பெரிய மால்காளில் தானியங்கி மூலம் மதுபானங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை பொருட்கள் காணப்படுவதோடு கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. திமுக ஆட்சி வந்தாலே இவை அனைத்தும் வந்துவிடும் என மக்கள் பேசி வருகின்றனர். இந்த நிலைக்கு, எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கு நாடாளுமன்ற தேர்தல் ஒரு முடிவாக இருக்கும்" என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
வெண்டிங் மெஷின்
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள நான்கு (Mall Shops) மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மட்டுமே, கடைகளுக்கு உள்ளேயே தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (Automatic Vending Machine) நிறுவ டாஸ்மாக் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த வெண்டிங் மெஷின் மால்களில் செயல்படும் நான்கு கடைகளில் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளதாகவும், கடைக்குள் இது பொருத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களும், 21 வயது குறைந்தவர்களும் இதனை எளிதாக அணுக இயலாது எனவும் டாஸ்மாக் உடனடியாக விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | TASMAC: மதுபான விற்பனை மெஷின் எதற்கு...? பாயிண்டை பிடித்த டாஸ்மாக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ