வதம் செய்ய தயாராக இருந்த எடப்பாடியின் போஸ்டர் கிழிப்பு

கையில் வேலுடன் முருகனைபோல் எடப்பாடி பழனிசாமி இருக்கும் புகைப்படம் சேலத்தில் ஒட்டப்பட்ட வேகத்தில் கிழிக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 28, 2022, 12:28 PM IST
  • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள்
  • முருகன் போல் சித்தரித்து ஓட்டப்பட்டுள்ளது
  • மர்ம நபர்கள் அந்த போஸ்டரை கிழித்துள்ளனர்
வதம் செய்ய தயாராக இருந்த எடப்பாடியின் போஸ்டர் கிழிப்பு  title=

அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தலைமை பதவியை கைப்பற்ற போவது யார்? என்ற போட்டியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி தலைமை பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்.

மேலும் படிக்க | சுற்றுப் பயணத்தில் கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு

இதனால் கலக்கத்தில் இருக்கும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக வந்துவிடக்கூடாது என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும், ஜூலை 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக ஆவதற்கான ஆயத்த பணிகள் திரைமறைவில் எடப்பாடி பழனிசாமி அணியினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சேலத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூரசம்ஹாரம் தொடங்கி விட்டதாகவும், விரைவில் அசுரனை அழிக்க முருகன் தயார் நிலையில் உள்ளதாக எடப்பாடிபழனிசாமியை முருகன் போல் கையில் வேலோடு சித்தரித்து சூரசம்ஹாரத்திற்கு தயார் என்ற நிலையில் சுவரொட்டிகள் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்களால் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது. இது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு - கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் போஸ்டர்... தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி?

இந்த சுவரொட்டிகள் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், அந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட வேகத்திலேயே கிழிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை ஓட்டியது யார்? ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்தது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News