உதயநிதிஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு : ரத்து செய்த நீதிமன்றம்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 28, 2022, 03:11 PM IST
  • உதயநிதி வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை
  • வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவு
உதயநிதிஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு : ரத்து செய்த நீதிமன்றம் title=

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவரின் இந்த வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அந்த வழக்கை நிராகரித்து உத்தரவிட்டிருந்தது.

இதற்கிடையில் ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் உதயநிதியின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், தேர்தலின்போது, உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவர் மீதான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அதற்கு தங்கள் தரப்பில் ஆட்சேபங்கள் தெரிவிக்கப்பட்டபோதிலும் அரசு அதை ஏற்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உதயநிதியின் வேட்புமனுவை ஏற்றது செல்லாது எனவும், அதன்மூலம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது செல்லாது எனவும் அறிவிக்க வேண்டுமென கோரியிருந்தார்.

மேலும் படிக்க | ஓபிஎஸ் தான் ஜல்லிக்கட்டு நாயகர்: விளக்கம் அளிக்கும் முன்னாள் முதலமைச்சர்

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி தரப்பில் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன் மீதான வழக்கு விவரங்களை மறைக்கவில்லை. எனவேதான் வேட்புமனு மீதான ஆட்சேபங்களை ஏற்காத தேர்தல் ஆணையம், எனது வேட்பு மனுவை ஏற்று போட்டியிட அனுமதித்தது. எனவே பிரேமலதா தொடர்ந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி பாரதிதாசன், தனக்கு எதிரான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத, நீதிமன்ற விசாரணைக்கு வராத 22 வழக்குகள் பற்றிய விவரங்களை உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் மனுவில் கூறப்படவில்லை எனக் கூறி, உதயநிதியின் மனுவை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து தீர்ப்பளித்தார்.

மேலும் படிக்க | New Wage Code: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, 3 நாட்கள் வார விடுமுறை, விதிகளில் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News