யானை தாக்கி பலியான குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி

 காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 59,100 ரூபாயும் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.

Last Updated : Jun 2, 2017, 03:55 PM IST
யானை தாக்கி பலியான குடும்பத்துக்கு முதல்வர் நிதியுதவி title=

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:-

கோயம்புத்தூர் மாவட்டம், குறிச்சி மற்றும் வெள்ளலூர் கிராமத்தில் இன்று அதிகாலை, காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து, வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகள் காயத்திரி,  வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி நாகரத்தினம், மாரியப்பன் மனைவி ஜோதிமணி மற்றும் பழனிசாமி ஆகிய நான்கு நபர்களை தாக்கி, அதனால் அவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து  மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கியதில் 3 நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிசிச்சை அளிக்க கோயம்புத்தூர் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரி களுக்கும் நான் உத்தர விட்டுள்ளேன். 

இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 59,100 ரூபாயும் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Trending News