ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

மூன்று நாட்கள் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்துள்ளதால் ஜாபர் சாதிக்கிடமும், அவரது மனைவியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Jul 16, 2024, 07:45 PM IST
  • ஜாபர் சாதிக் மனைவியிடம் விசாரணை.
  • போதை பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை.
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை! title=

டெல்லியில் 2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் திமுக நிர்வாகியும், சினிமா பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பவரை கடந்த மார்ச் மாதம் டெல்லி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவருடன் சேர்ந்து மொத்தம் ஐந்து நபர்களை இந்த வழக்கில் கைது செய்து விசாரணைக்கு பின் திகார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து 2000 கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கில் மீண்டும் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர்.

மேலும் படிக்க - நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் அதிரடி கைது!

இதையடுத்து ஜாஃபர் சாதிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள் மனைவி சகோதரர்கள் உள்ளிட்ட அனைவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டது. இதில் திரைப்பட நடிகரும் இயக்குனருமான அமீரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது ஆனால் அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிமாற்றத்தில் அவரை கைது செய்து இருப்பதால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது, இதையடுத்து அவர் டெல்லி சிறையில் இருந்து தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் இதை விசாரணை செய்த நீதிமன்றம் மூன்று நாட்கள் மட்டும் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஜாபர் சாதிக்கை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பேகத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் ஆறு மணி நேரமாக அமீனா பேகத்திடம் அமலாகத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது, ஏற்கனவே அமினா பேகம் ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் உள்ளிட்டவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்திருந்தது, அப்போது அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து மீண்டும் தற்போது விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்கு விவரங்கள் பற்றி அவரின் மனைவி அமீனா பேகத்திற்கு தெரியும் என்பதால் அவரிடம் தற்போது அமலாக்கத்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் 6 வருடங்களாக அவர்கள் பயன்படுத்தப்பட்டு வந்த வங்கி கணக்கு விவரங்களைக் கேட்டுப் பெற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூன்று நாட்கள் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்துள்ளதால் ஜாபர் சாதிக்கிடமும் அவரது மனைவியிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - உண்மை கொலையாளிகள் யார்? புதிய சிசிடிவி காட்சி வெளியானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News