விஜய்யின் "GOAT" பட ஸ்டிக்கர் ஒட்டிய தகராறில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு இடையே கத்திக்குத்து ஏற்பட்டு மண்டை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் எதிர்த்தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி கைதானவரின் மனைவி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (44) நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக குடியாத்தம் ஒன்றிய தலைவராக உள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ள நடிகர் விஜயின "GOAT" படத்தின் ஸ்டிக்கர்களை சில வாலிபர்கள் ஆட்டோவில் ஒட்டியுள்ளனர்.
மேலும் படிக்க | வயநாடு நிலச்சரிவு... நிவாரணம் வழங்கிய தனுஷ்! எவ்வளவு தெரியுமா?
இதை அறிந்த கலைச்செல்வம் தரப்பினர் நேற்று முன்தினம் இரவு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்களிடம் "நிர்வாகியான நான் இருக்கும் போது நீங்கள் எப்படி படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டலாம்" என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ள CM. செல்வம் என்பவர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கலைச் செல்வம் தரப்பினர், நேற்று இரவு செல்வம் வீட்டிற்கு சென்று "நீ யார் இந்த விஷயத்தில் தலையிட?" எனக்கு கேட்டு தகராறு செய்துள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த CM செல்வம் தரப்பை சேர்ந்த விஜய் என்பவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தமிழக வெற்றிக் கழக குடியாத்தம் ஒன்றிய தலைவர் கலைச்செல்வம் (45) அவரது மகன்கள் சஞ்சய் (21), லிங்கேஸ்வரன் (20) மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைதான குடியாத்தம் ஒன்றிய தமிழக வெற்றி கழக தலைவர் கலைச்செல்வனின் மனைவி உஷாராணி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரில், காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், எதிர்த்தரப்பை சேர்ந்த CM.செல்வம் ஆட்களும் எங்களது கணவர் மற்றும் மகன்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இதில் அவர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | மழை வந்தாலே தொல்லைதான்... கதறும் மக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ