தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
அந்தவகையில் மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது கூறியதாவது:-
*காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
*பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*காவிரி டெல்டா பகுதியை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
* தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.
*ஜாதி சான்றிதலில் மாற்றம் இன்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*இலங்கை இன படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தில் முறையான விசாரணை நடத்தப்படவும், இலங்கை ராணுவம் தமிழர்களை அழிப்பதற்கு, திமுக காங்கிரஸ் கூட்டணி செய்த இரகசிய உதவிகளை வெளிக்கொணரவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
*புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
*பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம்.
*தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு.
*நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
*கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
*மோகனூர் தடுப்பணையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்.
*மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்.
*பெண்கள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க தேசிய அளவில் புதிய அமைப்பை உருவாக்க அதிமுக வலியுறுத்தும்.
*காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.
*வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தடுத்து வறட்சியின் போது பயன்படுத்த திட்டம் கொண்டுவரப்படும்.
*உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பை பெறும் வண்னம் காலத்திற்கேற்ற பயிற்சி எம்.ஜி.ஆர் தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு திட்டம்.
*வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1500 செலுத்தப்படும்.
*அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும் .
இவ்வாறு அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.