வண்டலூர் ஜூவில் 20 வயது ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ரஹமான் என்று பெயர் கொண்ட ஆண் ஒட்டகச்சிவிங்கி  (20 வயது) பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது. 

Last Updated : Apr 7, 2018, 12:27 PM IST
வண்டலூர் ஜூவில் 20 வயது ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு! title=

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ரஹமான் என்று பெயர் கொண்ட ஆண் ஒட்டகச்சிவிங்கி  (20 வயது) பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளது. 

கூண்டிற்குள் வராத ஆண் ஒட்டகச்சிவிங்கியை கற்களை கொண்டு துரத்தியதால் பள்ளத்தில் விழுந்தது, மேலும் அதனை மீட்பதாக கூறி பூங்கா அதிகாரிகள் கிரேன் கொண்டு தூக்கிய போது ஒட்டகச்சிவிங்கி பரிதாபமாக உயிரிழந்ததாக என கூறப்படுகிறது. 

கடந்த வியாழக்கிழமை பள்ளத்தில் விழுத்த ஒட்டகச்சிவிங்கியை கிரேன் மூலம் மீட்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இரவு 11.50 மணிக்கு ஒட்டகச்சிவிங்கி மரணம் அடைந்ததாக வண்டலூர் மிருக சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Trending News