உலகில் யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா தொற்று உலக மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றது. நம் அன்றாட வாழ்வின் பல அம்சங்கள் பல மாற்றங்களை சந்தித்து இருக்கின்றன.
கல்வித் துறையில் (Education Department) அதிகப்படியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் சந்திக்காமலேயே கல்வு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஒருபுறம் மாணவர்களும் மறுபுறம் ஆசிரியர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்றபடி தங்களது அணுகுமுறையை மாற்றிக்கொண்டி வருகிறார்கள். முதலில் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள அனைவருக்கும் கடினமாக இருந்தாலும், மெல்ல மெல்ல இந்த புதிய இயல்பிற்கு அனைவரும் தங்களை பழக்கிக்கொண்டுள்ளார்கள் என்றுதான் கூற வேண்டும்.
இந்த நிலையில், தமிழக அரசு (TN Govenment)பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் ஆசிரியர்களுக்கு அடிப்படை கம்ப்யூட்டர் செயல்பாடுகளுக்கான புரிதல், ஆன்லைன் கல்விமுறை, ஆன்லைனில் கற்பித்தல், இணையம் மூலம் தேவையான தகவல்களையும் வசதிகளையும் பெறுதல் போன்ற பல திறமைகளை வளர்த்துக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை சில சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
ALSO READ: தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்த திறன் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு ஆசிரியருக்கும் 5 நாட்கள் பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளில் அடிப்படை கணினி பணிகள், செயல்பாடுகள், வர்ட், எக்சல், பி.டி.எஃப் டாகுமெண்டுகளை உருவாக்குவது, மின்னஞ்சல் அனுப்புவது, வகுப்பறைகளில் ஆன்லைன் வீடியோக்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்துவது என பல பயிற்சிகள் அளிக்கப்படும்.
ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் மூலம் மாணவர்கள் மேன்மையான மற்றும் சிறந்த ஆன்லைன் வகுப்புகளை பெற முடியும். இந்த பயிற்சிகள் அரசு பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களில் வழங்கப்படும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ள நிபுணர்களுக்கு இன்று முதல் 5 நாட்கள்க்கு இது குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டு, இது தொடர்பான பயிற்சிகளும் அளிக்கப்படும். இந்த பயிற்சியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) துவக்கி வைக்கிறார்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவார்கள். இந்த ஐந்து நாட்களும், ஆசிரியர்களுக்கு, காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியின் நிறைவில் சிறிய தேர்வு ஒன்றும் வைக்கப்படும். இதற்கான வீடியோகள், வினாத்தாள்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசின் இந்த முடிவால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வகுப்புகள் நடத்த அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படும் என்பதால், ஆசிரியர்கள் இந்த பயிற்சிக்கு ஆவலோடு காத்திருகிறார்கள்.
ALSO READ: தில்லியின் முகாமிட்டுள்ள EPS-OPS; அரசியல் பரபரப்பின் காரணம் என்ன..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR