கணவன் சொத்தில் மனைவிக்கும் பங்குண்டு... உயர் நீதிமன்றம் தந்த புது விளக்கம்!

குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என  விடுமுறையில்லாமல் மனைவி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை எனவும், அதை கணவனின் எட்டு மணி நேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2023, 06:41 PM IST
  • கணவன் வாங்கிய சொத்தில் மனைவிக்கு உரிமையில்லை என மனு தாக்கல்.
  • சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள் - நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி
கணவன் சொத்தில் மனைவிக்கும் பங்குண்டு... உயர் நீதிமன்றம் தந்த புது விளக்கம்! title=

உலகம் முழுவதும் திருமண உறவு என்பது மிகவும் சிக்கலுக்குரியதாக மாறியுள்ளது. கணவன் - மனைவி என்ற கட்டமைப்பில் ஏற்படும் சச்சரவால் குடும்ப வன்முறை, குடும்ப தகராறு போன்றவையும் அதிகரித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து, ஜீவனாம்சம் போன்ற குடும்ப பிரச்னைக்கான சட்ட ரீதியான அணுகலும் அதிகரித்துள்ளது. 

இது கவலையளிப்பதாகவும் பரவலாக கூறப்பட்டாலும், இந்தியா போன்ற குடும்ப உறவுகளின் நெருக்கடியில் சுற்றும் சமூகத்தில், இதுபோன்ற சட்ட ரீதியான பாதுகாப்புகள் தேவையாகவும் உள்ளது, கூடவே இது ஆரோக்கியமான விஷயம் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதாவது, மனைவி தான் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக உழைத்தும், அவர் அந்த குடும்ப அமைப்பில் இருந்து வெளியேற நினைக்கும்போது அவருக்கான உரிய சொத்து ரீதியிலான பாதுகாப்பின்மை ஏற்கத்தக்கதல்ல. 

அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்றம் குடும்ப பிரச்னை தொடர்பான சொத்து விவகாரத்தில் கவனிக்கத்தகுந்த தீர்ப்பு ஒன்றை இன்று வழங்கியுள்ளது. இது வருங்காலத்தில், பலராலும் மேற்கொள் காட்டக்கூடிய உத்தரவாகவும் அமைந்திருக்கிறது. அந்த வழக்கையும், அதுகுறித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் இங்கு காணலாம்.  

மேலும் படிக்க | விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி!

வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை எனக் கூறி கணவன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி,"கணவன் சம்பாதிப்பதும், மனைவி குழந்தைகள் – குடும்பத்தை கவனிப்பதும் பொதுவானது. குடும்பத்தை மனைவி கவனிப்பதால் தான் கணவரால் தனது பணியை செய்ய முடிகிறது என்பதால், கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்தில் மனைவிக்கும் சமபங்கு பெற உரிமை உள்ளது.

குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதன் மூலம், குடும்ப மருத்துவர் போல, 24 மணி நேரமும், விடுமுறையில்லாமல் மனைவி மேற்கொள்ளும் பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது" என்று நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள் எனக் குறிப்பிட்ட நீதிபதி, கணவன் சம்பாத்தியம் மூலம் தன் பங்கை வழங்கினால், குடும்பத்தை கவனித்து மனைவி தன் பங்களிப்பை வழங்குவதால், சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது என உத்தரவிட்டுள்ளார்.

குடும்பத்தை கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ மனைவி அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்த சட்டமும் இயற்றப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதி, அந்த பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போடும் ஸ்கெட்ச்..! அடுத்த அதிகாரி சிக்கினார்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News