PPF, NSC, SSY: சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி, வட்டி விகிதம் உயரும்

Saving Schemes: ரெப்போ விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்த பிறகு, அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்பட உள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2022, 10:52 AM IST
  • ஜூலை 1 முதல், அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • தற்போது, ​​பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது.
  • செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி 7.6 சதவீதமாக உள்ளது.
PPF, NSC, SSY: சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி, வட்டி விகிதம் உயரும் title=

அரசாங்க சேமிப்புத் திட்டங்கள்: என்எஸ்சி, பிபிஎஃப் மற்றும் எஸ்எஸ்ஒய் எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ரெப்போ விகிதத்தை மீண்டும் 0.50 சதவீதம் உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்த பிறகு, இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஜூன் இறுதிக்குள் அதிகரிக்கப்பட உள்ளன. 

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை ஒரு மாதத்தில் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதன்பிறகு, அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு காலாண்டு தொடங்குவதற்கு முன், நிதி அமைச்சகம் சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மதிப்பாய்வு செய்து அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும்

ரெப்போ விகிதத்தை உயர்த்தும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்குப் பிறகு, பல வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஜூலை 1 முதல், இந்த அரசு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி முதலில் மே 4 மற்றும் பின்னர் ஜூன் 8 அன்று ரெப்போ விகிதத்தை மொத்தம் 90 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 

மேலும் படிக்க | LPG Gas Connection: கேஸ் கனெக்ஷன் விலை கடும் உயர்வு ; மக்கள் வேதனை 

இத்தகைய சூழ்நிலையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான இந்த சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை நிதி அமைச்சகம் மதிப்பாய்வு செய்யும் போது, ​​இந்த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்கக்கூடும். 

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்

தற்போது, ​​பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாக உள்ளது. என்எஸ்சி அதாவது தேசிய சேமிப்புச் சான்றிதழின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.8 சதவீதமாக உள்ளது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி 7.6 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டியும், கிசான் விகாஸ் பத்ராவுக்கு 6.9 சதவீத வட்டியும், ஓராண்டு நிரந்தர வைப்புத் திட்டத்துக்கு 5.5 சதவீத வட்டியும், ஒன்று முதல் ஐந்து வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 5.5-6.7 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. ஐந்தாண்டு வைப்புத் திட்டத்தில் 5.8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

ஏப்ரல் 2020 முதல் வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை

2020-21 முதல் காலாண்டில் இருந்து சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 2022-23 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் ஏப்ரல் 1, 2022 முதல் தொடங்கி ஜூன் 30, 2022-ல் நிறைவடையும் நான்காவது காலாண்டில் (ஜனவரி) தற்போதைய விலையில் இருந்து மாற்றமில்லாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | IRCTC பயணிகளுக்கு எச்சரிக்கை, மறந்து கூட இந்த தவறை செய்யாதீங்க 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News