ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை - ஆளுநர் ரவி

Governor Ravi Speech About Hindu : ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை ; அது தர்மமே இல்லை என்று தமிழக ஆளுநர் ரவி கருத்துத் தெரிவித்துள்ளார்.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Jun 26, 2022, 01:19 PM IST
  • தொடரும் ஆளுநரின் சனாதன தர்ம சர்ச்சைப் பேச்சுகள்
  • குடும்ப அமைப்பு கெடாமல் இருப்பதற்கு ஞானிகளே காரணம் - குருமூர்த்தி
  • சனாதனம் வேறு, மதம் வேறு - ஆளுநர் ரவி
ஒரு கடவுளை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை - ஆளுநர் ரவி title=

சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, துக்ளக் குருமூர்த்தி, நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் விவேகானந்தர் சிலை வழங்கப்பட்டது. 

மேலும் படிக்க | இந்தி தெரிந்தால் வேலையா? அப்போ இங்கே பானிபூரி விற்பவர்கள் யார்? அமைச்சர் கருத்து வைரல்

பின்னர் மேடையில் குருமூர்த்தி பேசியதாவது, ‘ஞானமும் பதவியும் ஒன்று சேராது. இவரை போன்றவர்கள் ஆளுநராக வருவதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சார ஆதிக்கத்தில் பல ஆண்டுகள் இருந்தும் நம் கலாச்சாரம், பண்பு காப்பற்றப்பட்டிருப்பதற்கு காரணம் ஞானிகள் தான்.  பாடபுத்தகங்கள், பள்ளி, கல்லூரி, அரசு இல்லை. நமது நாட்டில் 60-70 கோடி நபர்கள் மற்றவர்களை சார்ந்து உள்ளனர். தம்மை பாதுகாத்து கொள்ளாதவர்களை மற்றவர்கள் பார்த்து கொள்வதே குடும்பம். 

வெளிநாடுகளில் 55% திருமணங்கள் விவகாரத்தில் முடிகிறது. 67% இரண்டாவது திருமணங்களும் விவகாரத்தில் முடிகிறது. 28% திருமணங்கள் மட்டுமே நீடிக்கிறது. வெளிநாடுகளில் வல்லரசு நாடுகளில் தற்போது ஏற்பட்டு இருக்க கூடிய மிக பெரிய சிக்கலே வயதானவர்களை பார்த்து கொள்வதில்தான். அதனை அவர்களால் தாக்கு பிடிக்க முடியுமா என்பது கேள்வியாக உள்ள நிலையில் இந்தியாவில் இதுபோன்ற சூழல் இல்லாமல் இருப்பதற்கு ஒரே காரணம் ஞானிகள்தான்’ என்றார்.  

தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி மேடையில் பேசியதாவது, ‘அறிவியல், தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும் இந்த உலகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. சனாதனம், சனாதனத் தர்மம் ஆகிய படைப்புகளின் ஒருங்கிணைந்த ஒற்றுமையாக உள்ளது. அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்கள் கையில் மிக பெரிய சக்தியை வழங்கியுள்ளது. அது மிகப் பெரிய ஆபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.  இந்த உலகத்தை பல முறை அழிக்க கூடிய சக்தி பல நாடுகளிடம் தற்போது உள்ளது. 

நீண்ட காலமாக வெள்ளையர்கள் இந்த நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்ததால் பொருளாதார ரீதியில் மட்டும் இல்லாமல் கலாச்சாரத்திலும் நாம் பெரிய அளவில் இழந்தோம். வெள்ளையர்கள் இந்தியாவில் வெளியேறிய பின்னர் இந்தியாவில் உள்ள மனிதர்களின் வாழ்க்கை முறை தர்ம விதிகளில் இருந்து திசை திருப்பப்பட்டது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கூறப்பட்ட மதச் சார்பின்மைக்கும், வெளியே போதிக்கபட்ட மத சார்பின்மைக்கும் மிக பெரிய வித்தியாசம் இருந்தது. 

மேலும் படிக்க | ’ஒரு வேலையும் செய்யல’ ஆளுநர் மற்றும் அண்ணாமலையை கலாய்த்த டி.ஆர்.பி ராஜா

சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேச வேண்டாம். சனாதனமும் மதமும் வேறு வேறு. மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களும் சனாதனத்தை பின்பற்றி உள்ளனர். தற்போது நம்முடைய நாடு விழித்துக் கொண்டுள்ளது.  நாட்டின் முதுகெலும்பு என விவேகானந்தர், மகாத்மா காந்தி கூறிய ஆன்மிக வழியில் சிந்திக்க செயல்பட துவங்கியுள்ளது. அனைத்து கடவுள்களுக்கும் இடங்கள் உள்ளது. ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று கூறுவது சனாதன தர்மம் இல்லை, அது தர்மமே இல்லை. 

அனைத்து மதங்களுக்கான இடமும் இங்கு உள்ளது. விவேகானந்தரின் கனவு பாரதத்தை உருவாக்க, தர்மத்தை வளர்க்க வேண்டும்.  அதற்கு ஆன்மிகம் மீதான வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் பாதையில் இதனையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்’ என்றார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News