அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மைய இயக்குநர் தகவல் அளித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2019, 01:31 PM IST
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு title=

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மைய இயக்குநர் தகவல் அளித்துள்ளார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியது, 

வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டிருக்கும் காற்றின் சங்கமித்தின் காரணமாக வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கும் மற்றும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையின் அளவு திருச்சியில் 13 செ.மீ, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ராயக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டத்தின் வாழப்பாடியில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. 

சென்னை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 18 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்த வரை 33 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 5 செ.மீ அதிகம். 

தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, அரியலூர் மற்றும் பெரம்புலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News