தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

Last Updated : Sep 14, 2019, 02:17 PM IST
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை; எச்சரிக்கும் வானிலை மையம்!  title=

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் மழை பெய்தது. உளுந்தூர்பேட்டை, திருவெண்னைநல்லூர், சங்கராபுரம், காணை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரத்தில் மழை பெய்தது. தொடர்ந்து 4-வது நாளாக மழை பெய்ததால், வெயிலின் தாக்கத்தால் அவதிபட்டு வந்த விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது; தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தஞ்சை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர். 

 

Trending News