புண்ணியமான பாரத பூமி இப்போது பலாத்காரம் செய்பவர்களின் பூமியாக மாறியுள்ளது-Madras HC

நாடு முழுவதும் இப்படிப்பட்ட சமவங்கள் பல நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் நம் மனதை பதபதைக்க வைக்கும் விதத்தில் உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 1, 2020, 09:07 PM IST
  • புண்ணியமான பாரத பூமி, இப்போது பலாத்காரம் செய்பவர்களின் பூமியாக மாறியுள்ளது.-Madras HC.
  • நமது நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார்.
  • திருப்பூர் மாவட்டத்தில் அசாமில் இருந்து குடியேறிய 22 வயது தொழிலாளியை 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
புண்ணியமான பாரத பூமி இப்போது பலாத்காரம் செய்பவர்களின் பூமியாக மாறியுள்ளது-Madras HC title=

சென்னை: புண்ணியமான பாரத பூமி இப்போது ‘பலாத்காரம் செய்பவர்களின்’ பூமியாக மாறியுள்ளது என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் (Madras High Court) வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ளது. நமது நாட்டில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறார் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

வக்கீல் ஏ.பி. சூர்யபிரகாசம் தாக்கல் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர் (Migrant Labourers) தொடர்பான ஒரு வழக்கை நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில், திருப்பூர் மாவட்டத்தில் (Tiruppur District) ஒரு அசாமிய புலம்பெயர்ந்த தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

ALSO READ: Coimbatore Horror: பெண்ணே ஜாக்கிரதை, நண்பன் என்ற பெயரில் நரிகள் நடமாடும் உலகம் இது!!

"பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கோயம்புத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்குமாறு போலீஸ் டைரக்டர் ஜெனரலுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நான் நீதிமன்றத்தில் மன்றாடினேன். பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்றார் சூர்யபிரகாசம்.

அவரது அனைத்து கோரிக்கைகளையும் ஏற்ற நீதிமன்றம், புண்ணியமான பாரத பூமி, இப்போது ‘பலாத்காரம் செய்பவர்களின்’ பூமியாக மாறியுள்ளது. அங்கு ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு கற்பழிப்பு நிகழ்கிறது என்று கூறியது.

திருப்பூர் மாவட்டத்தில் அசாமில் இருந்து குடியேறிய 22 வயது தொழிலாளியை 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இப்படிப்பட்ட சமவங்கள் பல நடந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் நம் மனதை பதபதைக்க வைக்கும் விதத்தில் உள்ளன. கடுமையான பல சட்டங்கள் ஒரு புறம் வந்து கொண்டிருந்தாலும், இவற்றில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவதாகத் தெரியவில்லை. 

அன்றிலிருந்து இன்று வரை எதுவும் மாறவில்லை. என்ன சட்டம் வந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும், நான் நினைத்தை செய்வேன் என்ற வீராப்புடன் மனசாட்சியை விற்று விட்டு வீதி வீதியாய் அலையும் நபர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதற்கு யார் காரணம்? வீட்டுச் சூழலா, சமூக சீர்கேடா, தனி மனித ஒழுக்கம் என்பது மறைந்து விட்டதா? நமது சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கின்றது?

இத்தனை கேள்விகளுக்கும் பதிலை நம்மால் தேட முடியுமா? அப்படி தேடி நாம் இவற்றையெல்லாம் சரி செய்வதற்குள் நிலைமை கட்டுக்கடங்காமல் போய் விடாதா?

ALSO READ: “அவங்கள Public-கா சுடுங்க”: Hathras Gangrape Case குறித்து Twitter-ல் கங்கணா!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News