சென்னை: தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டது. இரண்டி நாட்களில் மட்டுமே மொத்தம் ரூ.294.7 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகி உள்ளது. முதல் நாளில் ரூ.172.59 கோடிக்கும், இரண்டாவது நாளில் ரூ.122 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
மண்டலம் வாரியாக நேற்று விற்பனை மதிப்பு:
சென்னை மண்டலம்- 9.28 கோடி
திருச்சி மண்டலம் - 31.17 கோடி
மதுரை மண்டலம் - 32.45 கோடி
சேலம் மண்டலம் - 29.09 கோடி
கோவை மண்டலம் - 20.01 கோடி
மண்டலம் வாரியாக முதல் நாளில் விற்பனை மதிப்பு:
சென்னை மண்டலம்- 10.16 கோடி
திருச்சி மண்டலம் - 45.78 கோடி
மதுரை மண்டலம் - 46.78 கோடி
சேலம் மண்டலம் - 41.56 கோடி
கோவை மண்டலம் - 28.42 கோடி
மண்டலம் வாரியாக மொத்த விற்பனை மதிப்பு:
சென்னை மண்டலம்- 19. 44 கோடி
திருச்சி மண்டலம் - 76.95 கோடி
மதுரை மண்டலம் - 79.23 கோடி
சேலம் மண்டலம் - 70.65 கோடி
கோவை மண்டலம் - 48.43 கோடி
இந்த முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் ஒன்று மதுபானம் விற்பனை செய்யலாம். இதனையடுத்து, நாடு முழுவதும் பல மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து தமிழகத்திலும் மதுபானக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மே 7 முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அதேவேளையில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று மாநில அரசு தெளிவுபடுத்தியது.
தமிழக அரசின் அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசின் முடிவை சரியானது அல்ல என பல தரப்பினரும் எதிப்பு தெரிவித்தனர்.
இதன்பின்னர் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. ஆனால் பெண்களும், பொதுமக்களும் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிறப்பு வழக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஊரடங்கு உத்தரவு முடியும் வரை டசமாக் கடைகள் திறக்கக்கூடாது எனத் தீர்ப்பளித்தது.