மதுரையிலும் பாகுபலி மகிழ்மதி கோட்டை வந்தாச்சு!

மதுரை தமுக்கம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பாகுபலி அரங்குகள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Last Updated : Dec 29, 2017, 02:18 PM IST
மதுரையிலும் பாகுபலி  மகிழ்மதி கோட்டை வந்தாச்சு! title=

பிரமாண்டம் என்ற சொல்லை கிட்டதும் அனைவரின் நினைவில் வருவது பாகுபலி திரைப்படம் தான். மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இந்தப் திரைப்படத்தின் கதாபாத்திரங்களை செட் வடிவில் உருவாக்கியுள்ளது. 

இந்த செட் அமைப்பு பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இந்த கண்காட்சி, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே காண அனுமதிக்கின்றனர். 

பாகுபலியில் வரும் மகிழ்மதி கோட்டை, படகு, அரசர் இருக்கை என படத்தில் வரும் அனைத்து முக்கிய கதாபாத்திரத்தின் சிலைகளும் இங்கு தத்துரூபமாக அமைத்துள்ளனர். 

அதும் இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம், பள்ளி விடுமுறை காலம் என்பதால் பள்ளி மாணவர்கள் இந்தப் பிரமாண்ட அரங்கத்தை அதிகளவில் வந்து பார்த்து மகிழ்கின்றனர். 

மதுரையில் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் இந்த கண்காட்சியை வந்து கண்டு ரசித்து செல்கின்றனர்.

Trending News