கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட லாக்டௌன் காரணமாக, அனைத்து இடங்களைப் போலவே கோயம்பேடு சந்தையும் (Koyambedu Market) சுமார் ஆறு மாத காலமாக மூடப்பட்டிருந்தது. லாக்டௌன் சற்று தளர்த்தப்படவே, கடந்த மாதம் தான் சந்தை பல கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு சந்தை மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதமே ஆகியுள்ளது. இப்போது வந்துள்ள சுகாதாரத் துறையின் 22 நாள் (செப்டம்பர் 18 முதல்) சோதனை முடிவுகள் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடுக்கத்தை அளித்துள்ளன.
ஒரு அதிர்ச்சியூட்டும் வெளிப்பாட்டில், கோயம்பேடு சந்தையில் இருந்த அல்லது அங்கு சென்று வந்த 50 பேரது COVID-19 பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்துள்ளன என தெரிய வந்துள்ளது.
இருப்பினும், நேர்மறையாக பரிசோதித்தவர்களின் எண்ணிக்கை அங்கு சென்ற மொத்த நபர்களின் எண்ணிக்கையில் 1.5 சதவீதம் மட்டுமே ஆகும்.
வர்த்தகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டது. செப்டம்பர் 18 முதல் இங்கு நடவடிக்கைகள் படிப்படியாக துவக்கப்பட்டன.
சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சந்தைக்கு வருவது அனுமதிக்கப்படவில்லை. 200 மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. மொத்த வியாபார வியாபாரிகளையும் சரக்கு வாகனங்களையும் சோதிக்க கடுமையான நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட்டன.
ALSO READ: COVID -19: இந்தியாவில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் எது தெரியுமா..!!!
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு சந்தை மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதமே ஆகிறது. இப்போது சுகாதாரத் துறையின் 22 நாள் (செப்டம்பர் 18 முதல்) சோதனை முடிவுகள் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நடுக்கத்தை அளித்துள்ளன.
முன்னதாக, கோயம்பேடு COVID-19 தொற்று பரவுவதைத் தடுக்க மூடப்பட்டது. அங்கு சென்று வந்த பலருக்கு கொரோனா தொற்று (Corona Virus) உறுதிசெய்யப்பட்டதே அதற்குக் காரணம். காய்கறி சந்தை திருமழிசைக்கும், மலர் சந்தை வானகரத்திற்கும், பழச் சந்தை மாதவரம் பஸ் நிறுத்தத்திற்கு அருகிலும் தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டன.
இப்போது கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் COVID-19 தொற்று பரவும் ஒரு முக்கியமான மையமாக மாறி வரும் நிலையில் முன்பிருந்த கண்டிப்புகளும் மாற்று ஏற்பாடுகளும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என பரவலாக பேசப் படுகின்றது.
ALSO READ: Good News: Iodine based sanitiser-களை வெளியிடப்போகும் உலகின் முதல் நாடாகப்போகிறது இந்தியா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR