ஹெல்மெட் போட்டால் கிடைக்கும் ஜாக்பாட்... போலீசாரின் சர்ப்ரைஸ் கிப்ட் - என்ன தெரியுமா?

Traffic Police Surprise Gift: ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வருபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதே வேளையில், ஹெல்மெட் அணிந்து போக்குவரத்து விதியை பின்பற்றுபவர்களுக்கு போலீசார் சர்ப்ரைஸாக பரிசளிக்கின்றனர். அதுகுறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 24, 2023, 05:19 PM IST
  • இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம்.
  • சென்னையை அடுத்து கோவையிலும் இது அமலுக்கு வருகிறது.
  • வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்த தஞ்சாவூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஹெல்மெட் போட்டால் கிடைக்கும் ஜாக்பாட்... போலீசாரின் சர்ப்ரைஸ் கிப்ட் - என்ன தெரியுமா? title=

Traffic Police Surprise Gift: நாடு முழுவதும் சாலை விதியை மீறுவதனால் ஆயிரக்கணக்கானோர் விபத்தில் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றனர். அதில், தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும், தொடர்ந்து அதை செய்பவர்களுக்கு சட்ட ரீதியிலான கைதி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக, சென்னையில் பல்வேறு சாலை விபத்து தவிர்ப்பு நடவடிக்கைகளும், போக்குவரத்து விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபரும் தலைக்கவசம் அணிவது சென்னையில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறினால், ரூ. 1000 முதல் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதேபோல், நான்கு சக்கர வாகனங்களை இயக்கும்போது, சீட்பெல்ட் போட்டிருப்பதும் கட்டாயமாகும். வண்டியின் நம்பர் பிளேட் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு நடவடிக்கையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

சென்னையை அடுத்து கோவையிலும்...

சென்னையை தொடர்ந்து, தற்போது கோவையிலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 26ஆம் தேதி முதல்
இருசக்கர வாகனத்தை ஒட்டி செல்பவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என கோவை மாநகர காவல் துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | விஜய் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி!

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் விபத்துகளில் சிக்கி பலியாகும் சூழல்கள் உள்ளன. இதனால்தான், கோவை மாநகர காவல் துறை 100 சதவீத சாலை பாதுகாப்பை உறுதி செய்ய இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை அமல்படுத்தி உள்ளது.

விழிப்புணர்வு பயிற்சி

மேலும் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை மேறகொண்டு அவர்களுக்கு ஒருவார காலத்திற்கு போக்குவரத்து பூங்காவில (Traffic Park) தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க கோவை மாநகர காவல் துறை முடிவு எடுத்துள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளின் படி வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்லும் நபர்கள் தலைக்கவசம் அணிந்து தங்களது பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டுமென மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

இவை ஒருபுறம் இருக்க, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் அபாரதம் விதிப்பது மட்டுமின்றி, முறையாக விதிகளை பின்பற்றுபவர்களுக்கு போலீசார் பரிசுகள் வழங்கும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. 

சர்ப்ரைஸ் கிப்ட்

இதற்காக போக்குவரத்து காவல்துறையினர் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வரும் பெண்களுக்கு விலையில்லா பெட்ரோல் ஒரு லிட்டர், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை  அண்ணாசாலை சாலை வழியாக ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களை பெண் காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

நாம் தான் ஹெல்மெட் அணிந்து இருக்கிறோமே என அச்சத்துடன் நிறுத்திய பெண்களுக்கு 1000 ரூபாய் மதிப்பிலான வண்ண புடவைகளை பரிசாக வழங்கி அவர்களுக்கு போலீசார் சர்ப்ரைஸ் அளித்தனர். போக்குவரத்து பெண் காவலர்களை விட்டு பரிசு வழங்க வைத்து அவர்களையும் கெளரவப்படுத்திய நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரனுக்கு பெண் காவலர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

மேலும் படிக்க | உளுந்தூர்பேட்டை: தண்ணீர் குடிக்க குடத்திற்குள் தலைவிட்டு மாட்டிகொண்ட நாய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News